இந்தியா விடுதலை அடைந்து இன்னமும் ஜாதி அரசியல் மற்றும் ஜாதி ரீதியான வன்முறைகள் குறைந்தபாடில்லை.
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி விடுதலை அடைந்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து சாதிப் பிரிவுகளும் சமமான சமுதாய அந்தஸ்து பெற இட ஓதுக்கீடு தேவை என தீர்மானிக்கப்பட்டு சட்ட வல்லுனர்களால் 10 ஆண்டுகளுக்கு மட்டும் சாதி வாரி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
இதற்காக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அரசியல் அமைப்புகள் உருவாகி இட ஓதுக்கீடு 50% வரை அநேக மாநிலங்களிலும் தமிழ் நாட்டில் மட்டும் 69 % இட ஓதுக்கீடு அமலில் உள்ளது.
இட ஓதுக்கீடு அளிக்கப்பட்ட நோக்கம் சாதியினால் தாழ்த்தப்பட்டவராக கூறப்பட்ட சமூகத்தினரும் முன்னேறி அனைத்து சாதியனரும் சமுதாயத்தில் சம அந்தஸ்து அங்கீகாரம் பெற்று சமுதாயத்தில் அனைவரும் ஓற்றுமையாக வாழ வேண்டும் என்பதே.
ஆனால் இன்றைய நடைமுறை நிலைமை என்ன ? ஒரு குழந்தை வெறும் ஐந்து வயதிலேயே உன் சாதி என்ன என்ற கேள்வியுடனே பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாதி இல்லை என்று உதட்டளவில் கூறிக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலில் சீட்டு ஒதுக்கும் போது சாதி செல்வாக்கு அடிப்படையிலே மட்டுமே இடம் ஓதுக்கப்படுகிறது.
75 வருடத்திற்கு முன் என் தாத்தா தாழ்த்தப்பட்டவராக நடத்தப்பட்டார் என்பதற்காக இன்றைக்கு இந்த அரசியல் கட்சிகள் சொல்லுவது உண்மையாக இருந்தால் இந்நேரம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு இன்றைய சிறுவர்கள் ஜாதி ரீதியான பாரபட்சத்திற்கு ஆளாக வாய்ப்பில்லை. அந்த நிலை உண்மை என்றால் இன்றைய சிறுவர்களுக்கு இட ஓதுக்கீடு தேவையில்லை. இல்லை சாதி வேறுபாடு இன்னமும் நடைமுறையில் இருக்கிறதென்றால் சாதி ரீதியான இட ஓதுக்கீடு சாதித்தது என்ன ???
இட ஓதுக்கீடு மூன்று தலைமுறைக்கு பெற்ற பின்பும் ஒரு தலைமுறைக்கு கூட எங்கள் அடுத்த தலைமுறைக்கு இனி சாதி சான்றிதழ் தேவையில்லை கூறும் துணிவு இருக்கிறதா ??? கல்வியில், வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் என அனைத்திலும் இட ஓதுக்கீடு அளித்தும் ஒரு சமுதாயத்துக்கோ அல்லது ஒரு சாதி பிரிவினருக்கோ தன்னம்பிக்கை வரவில்லையென்றால் அந்த இட ஓதுக்கீடு சாதி பிளவை அதிகரிக்கரிக்கிறது என்று தானே பொருள்.
இந்த இட ஒதுக்கீடு கொள்கைக்கு வெளியே சில சாதியரை மட்டும் முற்படுத்தப்பட்டோர் என்று கூறி அவர்கள் 99.99% சதவிகிதம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு இந்த நாட்டில் சமூக நீதி நிலவுகிறது. இதனால் அந்த வகுப்புகளை சேர்ந்த பல மாணவர்களும் தங்கள் திற்மையால் பேரும் புகழும் பெற்று பல நாடுகளிலும் உயர் பதவிகளுக்கு போக முடிந்தாலும் ஆனால் இங்கு விட்டு விட்டு சென்ற பெற்றோர்களின் இறுதி சட்ங்கிற்கு கூட வர முடியாத அவல நிலைக்கு இந்திய இட ஒடுக்கீடு முறை பல கோடி இந்தியர்களை வெளிநாடுகளில் தஞ்சம் அடைய செய்துள்ளது.
இந்தியர்கள் அதிலும் பொது பிரிவினர் தங்கள் திறமையை அரசாங்க வேலைகளில் காட்ட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால் பல நாட்டுகாரர்கள் மத்தியில் தங்கள் திறமையினால் மட்டுமே போராடி உயர் பதவிகளுக்கு உயர்ந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையையும் தங்கள் திறமையினால் நிருபிக்கிறார்கள்.

இளைஞர்கள், சிறுவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் :
இங்கு அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கும் இந்துக்களுக்கு சாதி வாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். அதுவும் கடந்த 75 ஆண்டுகளாக கொடுத்தும் வருகிறார்கள். இன்னமும் 75 ஆண்டுகள் ஆனாலும் கொடுக்க வேண்டும் என்பார்கள்.
முதல் காட்சி : அரசு மருத்துவமனைகளில் அரசியல்வாதிகள் வைத்தியம் பார்த்துக் கொள்வதில்லை.
சமீபத்தில் கூட ஒரு அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றவர்கள் சில நாட்களிலேயே அந்த அமைச்சரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர்.
ஏன் என்று அரசியலை தாண்டி சிந்திப்போம் ???????
தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படும் என்ற நம்பிக்கை. என்ன காரணம் ??? தனியார் மருத்துவமனையில் வேலைக்கு அமர்த்தப்படும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் அரசு வேலைக்கு வரக் கூடிய திறமைகளை காட்டிலும் சாதி வாரி இடஒதுக்கீடு அடைப்படையிலேயே பணிக்கு தேர்வாகின்றனர். எந்த அரசியல்வாதி சாதி வைத்து அரசியல் செய்கிறாரோ அவரே கூட சாதி அடிப்படையில் வந்தவரிடம் தன் உடலை காட்ட விரும்புவதில்லை.
இரண்டாவது காட்சி : தனியார் பள்ளிக்கூடங்கள்
பெற்றொர் மிகவும் கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே அதிகம் விருப்பப்படுகிறார்கள். அரசு பள்ளிகளில் மிகப் பெரும்பான்மையாகவே ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வேறு வழியில்லாமல் சேர்க்கிறார்கள். இதில் மிகப் பெரிய முரண் என்ன என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை விட சம்பளம் பல மடங்கு குறைவு ஆனால் தனியார் பள்ளிகளில் பாடங்கள் பல மடங்கு அதிகமாக மாணவர்கள் மண்டைக்குள் செலுத்தப்படுகின்றது. ஏனென்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதி வாரி இட ஒதுக்கீடு மூலமாக பணி அமர்த்தப்படுகிறார்கள்.
( பின் குறிப்பு : அரசு பள்ளிகளிலும் பல அற்புதமான கடமையாற்றும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் )
இதனால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் கூட சாதி சான்றிதழால் பள்ளிக்கு ஆசிரியர்களாக தாங்களே கற்றுக் கொள்ளாததை மாணவர்களுக்கு போதிக்க முயன்று தாங்களும் தோற்று மாணவர்களையும் தோல்வியுற செய்து, மாணவர்கள் அரசு பள்ளிகளை தவிர்க்கும் நோக்குடன் தனியார் பள்ளிக்கு நோக்கி படை எடுக்கிறார்கள். அதிக சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர் சொல்லி தர முடியாததை குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் எப்படி சொல்லி தர முடிகிறது ????
சமத்துவ சமுதாயம் அமைய என்ன செய்ய வேண்டும் ??
முதலில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவதை நிறுத்த வேண்டும்.
"எந்த சாதியும் இல்லை" என்ற சான்றிதழ் மட்டுமே பெற வேண்டும். அப்பொழுது தான் பிள்ளைகளின் கல்வி தரம் உயரும்.
இந்தியா தவிர உலகெங்கிலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லாமலே பலரும் முன்னேறி சாதித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை தோல் நிற வெறி தாண்டவமாடிய பின்பும்
திரு நெல்சன் மண்டேலா அந்நாட்டின் தலைவரான போதும் கறுப்பு தோல் நிறத்தவருக்கு இட ஓதுக்கீடு கொடுக்கவில்லை. அனைவருக்குமான சமமான வாய்ப்புகளை உருவாக்கினார்.
இன்று நகரமயமாக்கப்பட்ட பல நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பல சாதிகளை சேர்ந்தவரும் மதத்தை சேர்ந்தவர்களும் எந்த பேதமும் இல்லாமல் வாழ்கிறார்கள். ஆனால் அனைவரிடமும் காண்பிக்கப்படும் பேதம் நிதி நிலை பொறுத்தே அமைகின்றது. பணக்காரர் ஏழை என்ற பேதம் எந்த மதத்தினர் ஜாதியினர் இடையே உட்பிரிவை ஏற்படுத்துகிறது. பணக்காரர்களின் பிணங்களை புதைக்கவும் ஏழைகளின் பிணங்களை புதைக்கும் கல்லறையும் தனித்தனியே இயங்குகிறது. அதனால் பொருளாதார ரீதியில் பிந்தங்கியவர்களை தூக்கி விட செல்வம் மிக்கவர்கள் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். பளபளக்கும் பங்காளக்களில் வேலைகள் செய்து தர ஆட்கள் அதே நகரத்தில் சேரியில் தான் வசிக்க வேண்டியிருக்கிறது. எந்த வேலை செய்பவரையும் குறைத்தோ மட்டம் தட்டியோ நடத்தக் கூடாது.
ஆனால் அரசியல்வாதிகளுக்கு மக்களை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே பிரித்தாணடு பழக்கமாகிவிட்டது. அதனால் தான் இன்று வரை சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கோருகிறார்கள். தெருக்களின் பெயர்களில் ( எ.கா. "அங்கப்ப நாயக்கன் தெரு - அங்கப்பன் தெருவாக மாற்றப்பட்டது ) சாதி பெயர்களை நீக்கியதால் சாதி நீங்கியதா ???
இதிலும் ஆண்கள் சாதியை ஓழிக்க மற்ற சாதி, மத பெண்களை தேடி காதல் வலை வீசி அதிலும் பெண்ணடிமை மன வக்கிரங்களை வெளிப்படுத்தும் அவல நிலைக்கு சமுதாயம் சென்று விட்டது. எல்லாவற்றிற்கும் பெண்களை பலிக்கடாவாக்கும் மனபான்மை அனைத்து சமுதாயத்திலும் பரவி இன்று பெண்களுக்கு இட ஓதிக்கீடு மசோதா தாக்கல் செய்யும் அளவிற்கு வந்து விட்டது. அதிலும் உள் ஒதுக்கீடாக சாதியை புகுத்துகிறார்கள்.
அரசியல்வாதிகளுக்கு உண்மையாகவே தாங்கள் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் என்ற நம்பிக்கை இருந்தால், மக்கள் எதிர்காலத்திலாவது ஓற்றுமையாக வாழ வேண்டும் என்ற நினைப்பு இருந்தால்
சாதியின் பெயராலோ மதங்களின் பெயராலோ சலுகைகள் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடட்டும். அதன் பிறகு இந்த நாட்டு மக்களிடையே சாதி, மத ரீதியான சண்டைகள் சச்சரவுகள் நிச்சயம் குறைந்து விடும்.
அதுவே உண்மையான சமூக நீதி. சமத்துவ சமுதாயம்.
அதுவும் தவிர மலைவாழ் மக்களை , காட்டு வாழ் மக்களை, உழவர்கள் பற்றிய பார்வை மாற வேண்டும். இவர்களின் பாரம்பரிய அறிவை இயற்கையை குறைவாக நுகர்ந்து வாழும் அற்புத கலையை கற்க வேண்டும். அவர்களுக்கு ஏதோ நகரவாசிகளை விட நாகரீகம் குறைவானவர்களாக கருதாமல் அவர்களை போற்றி வாழ்ந்தால், நாம் புவி வெப்பமயமாதல் அதன் தொடர்ச்சியாக பேரிடர்களை தவிர்க்க முடியும்.
இயற்கை பேரழிவில் இட ஒதுக்கீடு யாரும் கோர முடியாது ????
சகிருட்டிஸ் செப் 2023
Sakritease Sep 2023
Comments
Post a Comment
Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்