A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, October 24, 2023

ஒரே பாலின திருமணம் காலத்தின் கட்டாயம் Same sex marriage is a social necessity

கடந்த வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஒரே பாலின திருமணத்தை சட்டப்படி அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற வழக்கு வந்தது. அதனை நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்றி அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒதுங்கி கொண்டது.
இத்தகைய ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்வது சட்டப்படி சரியா ? தவறா ? இயற்கை முறைப்படி சரியா ? தவறா ? என்ற விவாதம் பல சமூக தளங்களில் ஓடிக் கொண்டுகிறது.

சமுதாயம் , பண்பாடு, பாரம்பரியம், மதம் என்று பல நடைமுறை வழக்கங்கள் படியும் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்வதையே அங்கீகரிக்கிறது. 

ஆனால் நமது சமூக கட்டமைப்பில் பல மாற்றங்கள் நடந்து வருவதை நாம் அனைவரும் கவனித்தே வருகின்றோம்.

1. மனம்:  மனிதம் என்ற சொல்லே "மனம்" என்ற சொல்லின் விரிவாக்கம் தான். 
நமது எண்ணங்களின் பல விதமான எண்ண அலைகளின் மூலமாக தான் இந்த உலகின் பல இயக்கங்களும் நடந்து வருகின்றன.  இன்றைய சூழ்நிலையில் இந்த பூமியில் பல மக்களுக்கும் வாழ்க்கை பெரும் சவாலாக இருக்கிறது. 
சில நாடுகளில் போர் சூழ்நிலையில் தவிக்கிறது. 
பல நாடுகளில் ஊழல் தலை விரித்தாடுகிறது. 
பல நாடுகள் பொருளாதாரத்தில் தத்தளித்து வருகின்றன.
பல நாடுகளில் பட்டினி தலை விரித்தாடுகிறது. 
இது தவிர இயற்கை சீற்றங்களால், நோய்களால், விபத்துகளால், விஞ்ஞான விபரீதங்களால் பல உயிர்களுக்கும் இந்த பூமி நிலையற்ற வாழ்க்கையை ஒரு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல தம்பதிகள் குழந்தைகள் பெற்றுக் கொள்வதை தவிர்க்கிறார்கள். பல தம்பதிகளுக்கு குழந்தைகள் பிறப்பதில்லை. 

 2. உணவு மனிதர்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு உணவிற்கு உள்ளது. நாமெல்லாம் தரமான உணவு உட்கொள்கிறோமா என்றால் இல்லை என்பதே யதார்த்தம். உணவு விதைகளை கூட இன்று மரபணு மாற்றப்பட்டுத்தான் வருகிறது. மரபணு மாற்றப்பட்ட விதையினால் உண்டான செடியில் இருந்து நாம் நேரடியாக பாரம்பரிய விதைகளினால் உண்டான செடிகளில் எடுத்துக் கொள்வது போல் விதைகளை எடுக்க முடியாது. ஏனென்றால் மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் மலட்டு விதைகளே வரும். இந்த தானியங்களையும் தாவரங்களையும் உட்கொள்பவர்கள் மலட்டுத்தன்மையே
https://sustainablepulse.com/2014/01/15/gm-bt-corn-causes-infertility-rats-new-egyptian-studies/

அடைவர். 

இன்று பல ஊர்களிலும் மாடுகளும் சினை ஊசி போடப்பட்டே கருவுருகின்றன. அதனால் இன்றைய தலைமுறை பல பசு மாடுகளும் காளையுடன் சேருவது என்றால் என்னவென்றே தெரியாது. இயற்கையில் எல்லா உயிரினங்களும் ஒரு ஆண் உயிரும் பெண் உயிரும் இணைவதன் மூலமே உயிர் இனப் பெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் இன்று மனிதனின் தேவைக் கேற்ப மாடுகளில் பெண் மாடுகள் மட்டுமே, கோழிகள் என்றால் பெட்டை கோழிகள் மட்டுமே வளர்க்கப்படுகின்றன. இதில் நமது அரசாங்கங்கள் மிகப் பொறுப்பாக ஊசியிலும் கூட "பெண் சிசு"க்கள் மட்டுமே பிறக்கும் படியாக விவசாயிகளுக்கு மாடுகளுக்கு சினை ஏற்ற  வழங்கி வருகிறார்கள். 

மனிதர்களிலும் நாய்களிலும் மட்டும் "ஆண் வாரிசு" வேண்டும் என்று மனிதர்களாகிய நாம் தீர்மானித்து விட்டோம். 

பசு மாடுகள் தான் பருவத்திற்கு வந்து விட்டேன் என்று காளைக்காக குரல் எழுப்பும் போது அங்கே ஒரு மனிதனின் கை ஊசியுடன் அதன் கர்ப்பபையை தொடுகிறது. அப்போது பசுவிற்கு கூடி குலாவ வேண்டிய காளை எங்கே ??? 

காளைன்னா என்னங்க ???
அதனால் அந்தப் பசுக்கள் பலவும் அதன் அருகில் இருக்கும் பசுக்கள் இடம் மட்டுமே உரசி நிற்க வேண்டும். பிராய்லர் கோழி வாழ்வதே 65 நாட்கள் தான் அதற்குள் அதற்கு பருவம் வந்ததா இல்லையா என்று தெரியாமல், சேவல் என்றால் என்ன வென்றே தெரியாமல் அதற்கு எடை பார்க்கப்பட்டு மாமிசத்திற்காக கொல்லப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் பசுவின் பாலையும், கோழியின் முட்டையையும் கறியையும் தின்னும் மனிதர்களுக்கு என்ன உணர்ச்சி வரும். அதுவும் மாடுகளுக்கு பிள்ளை பிறக்காமலே கூட பால் கறக்க ஊசி, கோழிகளுக்கு எடை கூட பல "ஆண்டிபயாடிக்" ஊசிகள். அப்போது இதை தின்பவர்களுக்கு  மட்டும் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வரும் ???  

இயற்கைக்கு முரணான 'ஆண்டிபயாடிக்" - "பயாடிக்" என்றால் என்ன ? உயிராற்றல்.  "ஆண்டிபயாடிக்" உயிராற்றலற்ற.  அப்போது இத்தைகய இயற்கைக்கு முரணான கலவைகளால் உணவுகளை மனிதன் உண்பதால் இரசாயன இயக்கத்தினால் இயங்கும் மூளையும் இந்த செயற்கை இரசாயங்களால் மாற்றம் ஏற்பட்டு " ஆண்டிக்கு -ஆண்டியையும் " "அங்கிளுக்கு அங்கிளைத்தான்" பிடிக்கிறது. 

3. நகர வாழ்க்கை முறை

இந்தியா கடந்த 75 ஆண்டுகளில் பெரும்பாலும் நகரத்தை நோக்கி நகர துவங்கி விட்டோம். கிராமங்களில் மக்கள் வாழ்ந்த வரை பல குழந்தகளை பெற்றெடுத்தார்கள். ஆனால் நகரங்களில் வாழ்க்கையில் இட நெருக்கடி தான் அடிப்படையே. அதனால் நகரமயமாக்கல் அதிகமாக அதிகமாக குழந்தைகளின் எண்ணிக்கை குறைய துவங்கியது.  இட பற்றாக்குறையே அனைத்தையும் தீர்மானிக்கிறது.  பல மனிதர்களுக்கு இந்த நகர வாழ்க்கையில் எதற்காக ஓடுகிறோம் யாருக்காக ஓடுகிறோம் ?? என்ற கேள்விகள் வாட்டுகிறது. வந்தோம் , வாழ்ந்தோம், பிள்ளை பெத்தோம் , செத்தோம் என்பதற்காகவா இந்த வாழ்க்கை என்ற சலிப்படைய செய்கிறது. விரக்தி ஏற்படுகிறது. 

அரசாங்கமும் மறைமுகமாக மக்கள் தொகை பெருக்கத்தை சமாளிக்க "நாமே இருவர் நமக்கெதுக்கு ஒருவர்"  என்ற சிந்தனை மேலோங்க வைக்கும் விதமாக - தண்ணீரில் க்ளோரின், உப்பில் அயோடின் என்று விதவிதமாக மக்கள் தொகையை கட்டுபடுத்திவிட்டது.  

இதுவும் தவிர குழந்தை பெற்றுக் கொள்பவருக்கும் அந்த குழந்தைக்கு மூளை வளர்ச்சி இல்லை, மன வளர்ச்சி இல்லை, ஆட்டிசம், ஹைபர் ஆக்டிவ், உடல் ஊனங்கள் என்று முத்திரையிடப்பட்ட பல தரப்பட்ட குழந்தைகள், அவர்களை வளர்க்க பெற்றோர் படும் பாடும்.

இதையும் தாண்டி வயதான பாட்டிகளை இளம் போதை வாலிபர்கள் பலாத்காரம் செய்வதும், இளம் சிறுமியரை வயதான தாத்தாக்கள் கர்ப்பமாக்குவதும் என்ற அவல செய்திகள் தினம் தினம் அலறுகின்றன.

பிள்ளை பெறுவதற்கு உகந்த சூழல் இல்லை, உடலுக்கு ஊட்டமில்லை, மனதில் திருப்தி இல்லை என்னும் போது உங்கள் வாழ்க்கை துணை ஆணாக இருந்தா என்ன ? பெண்ணாக இருந்தா என்ன ?? 

மனதையும் உடலையும் காயப்படுத்தாத ஒரு துணை போதும் என்று தானே நினைக்க தோன்றும். 

அதனால் ஒரே பாலின திருமணம் காலத்தின் கட்டாயம். 

( அதிலும் "கட்டாயம்" என்ற சொல்லை பயன்படுத்துவது கூட "கட்டாயமில்லை" என்றே நினைக்க தோன்றுகிறது )

4.  பிரபஞ்சம் - இதையும் தாண்டி ஒரு தூர பார்வையில் பார்க்கும் போது இந்த பிரபஞ்சத்திற்கும் இந்த மனிதன் என்ற உயிரினத்தை படைத்து செய்த ஆராய்ச்சி செய்து செய்து மிகவும் சலிப்பு ஏற்பட்டு விட்டதோ ??? அதனால் தான் மனிதர்களால் பூமிக்கு ஏற்படும் தொல்லைகளை கருத்தில் கொண்டு மனிதர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க தொடங்கிவிட்டதோ ???

-சகிருட்டிஸ்

Sakritease Oct 2023



No comments:

Post a Comment