A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, October 31, 2023

TN NO 1 Drunkards Road accidents தமிழ்நாடு முதலிடம் குடிகாரர்கள் சாலை விபத்துகளில்

 


இன்று நவம்பர் முதல் நாள் 2023 பிறந்த வேளையில் இரண்டு தினசரிகளில் வந்த தலைப்பு செய்திகள் தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையின் யதார்த்த நிலையை பிரதிபலிக்கிறது. 

தினமலரில் வந்த கட்டுரை https://m.dinamalar.com/detail-amp.php?id=3471222  தமிழ் நாட்டில் குடிமகர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தொட்டதை சொல்கிறது.

தினத்தந்தியில் வந்த தலைப்பு செய்தியோ நாட்டிலேயே https://www.dailythanthi.com/News/India/india-sees-119-jump-in-road-accidents-in-2022-tamil-nadu-tops-the-list-of-nh-mishap-1081135  சாலை விபத்துகளில் தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது என்கிறது.

தமிழ்நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கையில் குடிமகர்களையும் ( குடிமகன் என்று அழைத்தால் சில அமைச்சர்களுக்கு கோவம் வருகிறது ) சாலை விபத்துகளையும் மக்கள் தினம் தினம் ஒவ்வொரு சாலையிலும் சந்திக்க வேண்டி உள்ளது. 

அதுவும் சாலை விபத்துகளில் காவல்துறை வழக்கு பதிந்த எண்ணிக்கை மட்டுமே கணக்கில் எடுத்து கொள்ளப்படுகிறது. ஆனால் சாலைகளில் பல இடங்களில் பாதசாரிகளின் மீது மோதி காயம், எலும்பு முறிவு, உள்காயங்கள் ஆகிய விபத்துகள் , பைக்குகள் மோதி, கார்கள் மோதிக் கொண்டு நடக்கும் விபத்துகள் கணக்கில் கொள்ளப்படவில்லை. 

சாலைகளில் மிகத் தெளிவான மனநிலையில் இருப்பவர்களே பல விபத்துகளை ஏற்படுத்தும் போது, சாராய , கஞ்சா போதைகளில் இருப்பவர்கள் எப்படி செயல்படுவார்கள் ?? போதையும் அதில் வேகமாக ஓடும் வாகனங்களும் விபத்துகளுக்கு மூலக்காரணமாகும்.

இதில் நமது நாட்டில் சாலைகளின் தரம் அதை போடும் காண்டராக்டர்கள் மனம் போல் குண்டும் குழியுமாக உள்ளன. இதில் சாலையை குனிந்து பார்த்தவாறே எதிரில் வருபவரையும் பார்த்து ஓட்டுவது மிகப் பெரிய சவாலே. 

இதற்கு அரசியல்வாதிகள் பெரிய மனது வைத்தால் தான் தீர்வு. சாலைகள் போடுவதிலும், சாராய ஆலைகள் நடத்துவதிலும் கிடைக்கும் பெரும் இலாபத்தை மட்டுமே மனதில் வைத்து செயல் படுவதால் குற்றங்கள் பெருகுகின்றன். பொது மக்களின் மீது கொஞ்சம் இரக்கப்பட்டு தங்களின் அபரிமிதமான இலாபத்தை குறைத்துக் கொண்டு சாராய உற்பத்திக்கு டார்கெட் வைக்காமல் சாலை விபத்தை குறைக்க டார்கெட் வைத்து செயல்பட்டால் மட்டுமே பொது மக்களாகிய நாம் அனைவரும் சாலை விபத்துக்களை சந்திக்க வேண்டிய வாய்ப்புகள் குறையும்.




இதுவும் தவிர இன்னொரு மிகப் பெரிய பூதம் அதி வேகமாக இயக்கப்படும் வாகனங்கள். மிகப் பெரிய நெடுஞ்சாலைகளிலேயே 70 கிமீ-மணிக்கு வேகம் அதிகபட்ச நிர்ண்யிக்கப்பட்ட வேகமாக உள்ளது. ஆனால் தினம் தினம் சாலையில் அறிமுகப்படுத்தப்படும் வாகனங்களில் 250 கிமீமணி - 400 கிமீமஅணி வேகத்தில் செல்ல முடியும் என்பது மேலும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா முழுமைக்கும் "அதீத வேகமே" அதிக விபத்துகளின் மூலக் காரணமாக கடந்த ஆண்டின் ஆய்வறிக்கை கூறுவதாக இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் தலைப்பு செய்தி https://www.newindianexpress.com/nation/2023/nov/01/overspeeding-major-cause-of-road-accidents-in-2022-2628900.html பயமுறுத்துகிறது.  அரசாங்கம் ஏன் அதிவேக வாகனங்கள் தயாரிக்க அனுமதிக்கிறது என்று புரியவில்லை. 70 கிமீ மேல் வேகத்தில் போகக் கூடாது என்று சொல்லும் அரசாங்கம், குடித்து விட்டு ஓட்டக் கூடாது என்று சொல்லும் சட்டம் எப்படி இவற்றை தயாரிக்கும் ஆலைகளை அனுமதிக்கிறது ????




அதிவிரைவு வாகனத்தில் குடிபோதையில் ஓட்டப்படும் வாகனம் மிக அதிக விபத்துகள் ஏற்படுத்துகிறது என்று அரசாங்கமே சொல்லிவிட்டு, இலஞ்சம் பெற்றுக் கொண்டு லைசன்ஸ் கொடுத்து, ஊழல் செய்து சாலைகள் போடப்படும் நாட்டிலே, போதை பழக்கம் பெருகி, அதிவேகத்தில் சாலை விபத்து பெருகி வரும் நாடு எப்படி வளர்ச்சி அடைந்த நாடாகும் ? பாதசாரிகள் நடக்கவே முடியாத அளவில் சாலை வசதிகள். வாகனத்தில் செல்வதே கௌரவம் என்ற எண்ணப்போக்கை வளர்ந்து வருகிறது. 

சக உயிர்களின் மேல் அக்கறையில்லாத அலட்சியமான மனபோக்கை உருவாக்கும் சமுதாயம் எதை வைத்து வளர்ச்சி அடைந்துள்ளது என்று அளவிடுவது ???

சகிருட்டிஸ்
Sakritease Nov 2023








No comments:

Post a Comment