A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Thursday, April 11, 2024

Dravida Model Krishna சங்கீத உதயநிதி

 

திராவிட மாடல் கிருஷ்ணா

 


சமீபத்தில் கர்நாடக சங்கீத இசை உலகில் உயரிய விருதாக கருதப்படும் “சங்கீத கலாநிதி” விருதை திரு. டி.எம். கிருஷ்ணா (டி.எம்.கே ) அவர்களுக்கு வழங்குவதாக மியுசிக் அகாடமி அறிவித்தது. அதனை தொடர்ந்து பல இசைஞர்கள் அவருக்கு விருது கொடுப்பதால் ஜாதியம் பேசும் ஒருவருக்கு அங்கீகாரமாக கருதி தாங்கள் இனிமேல் மியுசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று கண்டனம் தெரிவித்துள்ளார்கள்.

இதில் சங்கீதத்தின் இங்கீதத்தை தாண்டி திரு. டி.எம்.கே சாதீய வண்ணத்தை கர்நாடக சங்கீத கலைஞர்கள் மீது  பூசி மொழிகி வருகிறார். இதனை மியுசிக் அகாடமியின் கொல்லை புறமான கோபாலபுரத்துகாரருக்கே தோன்றாத சிந்தனை என்று  “அவாளின்” ஆஸ்தான துதி பாடலாசிரி(றி)யரே சிலாகிக்கிறார்.

பிராமண சமூகம் சாதீயத்தை தூக்கி பிடிக்கிறதா ?

பெரும்பாலான பிராமண குடும்பங்களில் இன்றும் கூட கடவுள் வழிபாடு என்பது தினசரி வாழ்வில் அவசியமாக பார்க்கப்பட்டு, அதில் வாய்ப்பாட்டு, பரத நாட்டியம், வாத்தியங்கள் வாசிப்பு ஒரு வாழ்வியலாக அன்றாட வாழ்க்கையில் கலந்துவிட்டது. பல பிராம்மண குடும்ப திருமணங்களிலும் கர்நாடக சங்கீத கச்சேரிக்கு முக்கியத்துவம் தந்து கலைஞர்களை ஆதரிக்கிறார்கள்.  பிற சமூகத்தினரின் திருமணங்களின் வரவேற்ப்பில் மிக பெரும்பான்மையாக சினிமா பாடல் இசை கச்சேரிகளே இடம் பெருகின்றன. அமெரிக்கா சென்று குடியேறினாலும் அங்கும் எவ்வளவு தூரமானாலும் மிகவும் சிரமபட்டாவது தங்கள் குழந்தைகளுக்கு பாட்டு, பரதம், வேதம், பண்பாடு, கலாச்சாரம் , யோகா என்று பயிற்றுவிக்கிறனர். இதற்காக டிசம்பர் சீசன் கச்சேரிகளுக்கு தங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாத்தித்த பணத்தில் விமானத்திற்கு செலவு செய்து வந்து கற்றுக் கொடுக்கின்றனர்.  இவ்வளவு மெனக்கெட்டு ஒரு சமூகம் ஒரு கலையை தாங்கி பிடிப்பதால் அந்த நிகழ்ச்சிகளில் இந்த சமூகத்தின் தலைகள் அதிகம் தென்படுகின்றன. 


இதனால் மற்ற சமூகத்தின் சிறுவர்கள் இந்த கலைகள் கற்றுக் கொள்ள வாய்ப்பு எங்காவது மறுக்கப்படுகிறதா ? எல்லா சமூகத்திலும் இருப்பதை போல் இங்கும் காணப்படுவது பொருளாதார ஏற்றத் தாழ்வே. யேசுதாஸையும், இளையராஜாவையும் அதிகம் கொண்டாடுவதும் இந்த சமூகமே.  அமெரிக்காவில் கச்சேரி செய்வதற்காக பலரையும் சமுதாயமாக ஒன்றிணைத்து பல வித்வான்களை விமானத்தில் வரவழைத்து கலையை வளர்ப்பது பிராமண சமுதாயமே.

டி.எம்.கே சில சேரிகளிலும் இன்று கச்சேரிகள் செய்வது புதுமையானவை அல்ல.  18ம் நூற்றாண்டிலேயே கோபாலகிருஷ்ண பாரதியார் “நந்தனார் சரித்திரம்” என்ற இசை நாடகத்தை பட்டி தொட்டி எங்கும் பரப்பியவர்.  அதன் பிறகு பலப்பல பெரியவர்களின் முயற்சியால் பலரையும் இசை பல்வேறு வடிவங்களில் சென்று சேர்ந்து கொண்டே இருக்கிறது. கிறிஸ்துவ தேவலாயங்களில் பல பாடல்களை கர்நாடக சங்கீத இராகங்களில் பல நூற்றாண்டுகளாக பாடி வருகின்றனர்.  சன்னி வஹாபி, ஷியா இஸ்லாமிய இனங்களில் இசை வழி வழிபாடுகளை  “ஹராம்” ஆக கருதுவதால் “அல்லா”வை பெரும்பான்மையான முஸ்லீம்கள்  இசை வடிவில் தொழுவதில்லை.  சூஃபி  வழி முஸ்லீம்கள் மட்டுமே இசையை ஏற்கின்றனர். அதனால் தான் ஏ.ஆர். ரகுமான் அதனை தழுவி இசை அமைத்து பாடி வருகிறார்.  ரகுமானின் இசை பயணத்தில் உலக பிரசித்தி அடைய முள்ளில்லாத “ரோஜ” வாக வழி அமைத்த இயக்குனர் திரு. கே. பாலச்சந்தரும் ஒரு பிராமண சமூகத்தவரே.  

இன்றளவும் இந்துஸ்தானி இசைக்கும் கர்நாடக இசைக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடே சாகித்தியங்கள் எனப்படும் பக்தியோடு பாடப்பட்ட  கர்நாடக சங்கீதத்தில் உள்ள பாடல்கள் தான். இந்துஸ்தானி இசையில் அது வட இந்தியாவிலேயே பாடப்பட்டு வந்ததால் இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சியில் கடவுள் துதித்து பாட முடியாதாகையால் இந்துஸ்தானி பாடகர்கள் ஸ்வரங்களை விஸ்தரித்து மட்டுமே பாட முடியும்.  அதனால் அவர்களால் பக்தி பாவங்களை வெளிப்படுத்த முடியாமல் போனது.


ஆனால் கர்நாடக சங்கீதம் பல பாமரர்களையும் இந்துஸ்தானியை காட்டிலும் அதிக சென்றடைய காரணம் பக்திமிகு “பாவ”ங்களே.  அதனை கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேக கண்ணுடன் பார்ப்பவர்கள் எப்படி பக்தி பாவத்துடன் பாட முடியும் ?  இதனை பாழ் நெத்தியுடன் பாடும் கிருஷ்ணாவிற்கும் , கமல் காசனுக்கும், ஒரு தலை பட்சமாக எழுதும் என். ராமிற்கும் புரிய வாய்ப்பில்லை.  எந்த நாத்திகரையாவது பார்த்து எந்த ஆத்திகராவது “கடவுளை வணங்காதவன் முட்டாள்” என்று கூறுவதுண்டா ? அந்த அடிப்படை நாகரீகமும் தெரியாதவர்கள் “போலி” இந்து நாத்திகர்கள் மட்டுமே.

திருமதி. எம். எஸ். சுப்பலஷ்மி மிக பிரபலமானது அவர் ஒரு பிராமணரை மணந்ததால் அல்ல.  அவர் ராஜாஜி பட்டியல் இனத்தவரையும் திருப்பதி கோவிலுக்குள் செல்ல விடாமல் தடுத்த ஆங்கிலேய அரசாங்கத்தை தன் வாதத்தால்  வென்ற பிறகு எழுதிய “குறையொன்றுமில்லை” என்ற பாடலை பக்தி ததும்பும் குரலில் “இறைவன் முன் அனைவரும் சமம்” என்று தன் குரலாலும் செயலாலும் நம்பிக்கை அளித்ததால்.  கல்கி அவர்களின் “காற்றினிலே வரும் கீதம்” யார் கண்ணன் ? எங்கு இருக்கின்றான் என்று எம்.எஸ் அவர்களின் குரல் நாத்திக மண் குதிரைகளையும் இறைமையின் பால் இட்டு வந்தது.

எதை எடுத்தாலும் பிராமண இனத்துடன் ஏன் முடிச்சு இடுகிறார்கள் ?

இந்துக்களின் கோவில்களின் கணக்கில் அடங்கா சொத்துக்கள் அடைய இடைஞ்சல்களை களைய ஆங்கிலேய பிரித்தாளும் தந்திரத்தின் பின் விளைவாகவே கிறிஸ்த்துவ மிஷனரிகள் கட்டமைத்த “ சாதிய வன் கொடுமை” பிரிவினவாதம். கோவில்களின் தாக்கத்தை தகர்க்க மிக பெரும் தடையாக இருந்ததது , இருப்பது கோவில்களின் அர்ச்சகர்களாக, சிவாச்சாரியர்களாக, பட்டாச்சாரியர்களே ஆகும்.  இன்னமும் பலர் கோவிலுக்கு ஒரு வேளை விளக்கு கூட போட முடியாத கோவில்கள் தமிழ் நாட்டில் பல இருக்கின்றன.  அவற்றை கடுமையான ஏழ்மையிலும் பொருளாதார சிக்கலில் இருந்தாலும் இன்றும் எண்ணற்ற கோவில்களை மிகுந்த தெய்வ நம்பிக்கையோடு காப்பாற்றி வருகிறார்கள்.  இவர்களின் தட்டில் விழும் சில சில்லறை காசுகளை கொண்டு இவர்கள் வாழ்வதே உலக அதிசயங்களில் ஒன்று. ஆனால் மிகுந்த பொருளாதார சிக்கலிலும் கொடுமையான மன உளைச்சலையும் மீறி ஒரு தவமாக தர்மத்தை காப்பாற்ற குடும்பத்துடன் தங்களை வறுத்திக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். மற்றொரு புறம் அரசாங்கம் வருமானம் வரும் கோவில்களில் மட்டும் சம்பாதித்து இறைவனுக்கு நேரடியாக சேவை அளிப்பவர்களை தவிர்த்து மற்ற செலவுகளை ஜம்பமாக செய்து வருவதை பார்த்து மனம் நோகிறார்கள்.

இட ஒதுக்கீட்டிலும் இடம் கிடையாது :

இது வரை தமிழ்நாட்டை எந்த பிராமணரும் மன்னராட்சி காலங்களில் ஆண்டதாக சரித்திரம் இல்லை. ஆனால் ஆட்சிகள் ஆண்ட, சோழ, சேர, பாண்டிய, பல்லவ, விஜயநகர பேரரசுகள் வாரிசுகளுக்கு கூட இட ஓதுக்கீட்டில் பிற்படுத்தபட்டவாறாக இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் இன்றளவும் ஓடுக்கபட்டவராகளாகவே பல ஏழை அந்தணர்களின் வாரிசுகள் அவர்கள் முன்னோர்கள் செய்யததாக கூறப்படும் செய்யாத குற்றச்சாட்டிற்காக தண்டிக்கப்பட்டு வருகிறார்கள். இன்று ஒரு அந்தண குல வாரிசு 99.99% மார்க்கே வாங்கினாலும் டாக்டராக முடியாது.  69% இட ஒதுக்கீடு போக  மீதமுள்ள 31% விகிதத்திலும் ஒரு பட்டியல் இனத்தவர் அதிக மதிப்பெண் பெற்றால் அவரையும் பொது பிரிவாக கருதி பொது பிரிவு சீட்டுகளை வழங்கி சமூக நீதியை நிலை நாட்டுவதாக அநீதி செய்கின்றனர்.

https://www.sanskritimagazine.com/are-brahmins-the-dalits-of-today/

ஓடினர் ஓடினர் அமெரிக்காவிற்கே ஓடினர் :

தமிழ்நாட்டில் 1967 முதல் பிரமாண சமுதாயத்தினரை அரசாங்கத்தின் அனைத்து வேலைகளிலும் கட்டம் கட்டி வெளியேற்றும் வேலைகள் தொடர்ந்து நடந்து வட மாநிலங்களிலும் மும்பை போன்று பெரு நகரங்களுக்கும் திறமைக் கேற்ப வாய்ப்புகளை தேடி ஓடினர். அது போன்று பல நகரங்களிலும் தமிழக பிராமண சமூகத்தினர் தங்கள் திறமையால் முன்னேறி வந்தனர்.  அந்த நகரங்களிலும் கலை , பண்பாடுகளை வளர்ப்பதில் பெரும் பங்கு வகித்தனர். 80 களின் இறுதிகளில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னேற்றம் வர மென்பொருள் தொழிட்நுட்பத்திலும் தங்கள் திறமையினால் மட்டுமே முன்னேறினர்.  இந்திய பொறியாளர்களுக்கு மேற்கத்திய நாடுகளில் , குறிப்பாக அமெரிக்காவில் பெரும் வரவேற்பு கிடைத்தது.  கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் இடஒதுக்கீடு கொள்கையால் இங்கே தரமான படிப்பு படிக்க மறுக்கப்பட்ட போதும் வங்கிகளில் கடன் வாங்கி  உயர் படிப்பு படித்து, வங்கி கடன்களையும் அடைத்து தங்கள் வேலைகளில் பல உயர் படிகளை அடைந்தனர்.  நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமையும் பொருளையும் சேர்த்துள்ளனர்.  உலகளவில் பல ஏர்போர்டுகளிலும் பிராமண தாய்மார்கள் தங்கள் மகள், மருமகளுக்கு பிரசவம் பார்க்க , பிள்ளைகளை பார்த்துக் கொள்ள என்று பறந்து சென்று வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டின் இனவெறி வெறுப்பால் பிள்ளைகள் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழ விரும்ப, இங்கு பல பெற்றோர்களும் தனிமையில் வாட அல்லது முதியோர் இல்லங்களில் தனித்து விடப்படும் நிலையில் இந்த பிராமண வெறுப்பு நாடகம் மூல காரணமாக தலைவிரித்தாடுகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் வரவேண்டும் என்றாலும் அதற்கு ஜாதி தகுதி இருக்க வேண்டும் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கும் திறமைகளை கண்டறிய டி.என்.பி.எல் (TNPL) மாநில மட்டத்தில் டி20 போட்டிகளை நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தை நடத்துபவரும் ஒரு பிராமணரே. தென் காசிக்கருகே கிராமங்களில் இருப்பவர்களின் திறமையை வெளிப்படுத்த அங்கும் ஐ.டி. நிறுவனத்தை நடத்தி அனைத்து மக்களையும் ஜாதி வித்தியாசம் பாராமல் முன்னேற்ற முனைவதும் ஒரு பிராமண வகுப்பை சேர்ந்தவரே.

யூத படுகொலைக்கு இணையாக பிராமண இன படுகொலை :

தமிழ்நாட்டில் இன்றளவில்  பட்டியல் இன மக்களிடம் பிராமண சமூகத்தினால் தான் அவர்கள் தாழ்த்தப்பட்டனர் என்று ஒரு பிரம்மாண்ட பூச்சாண்டியாக காட்டி காட்டி  இன்று தனியார் வேலைகளில் கூட இட ஒதுக்கீடு, அமெரிக்க ஐ.டி. கம்பெனிகளிலும் இட ஒதுக்கீடு கேட்க்கும் அளவிற்கு இங்கு இருக்கும் அரசியல்வாதிகள் மக்களை மூளை மழுங்கச் செய்து வருகின்றனர். கண்மூடிதனமான இந்த வெறுப்பு சூழ்நிலையால் பல சமுதாயத்தினரும் செய்ததாக சொல்லப்படும் ஒரு செயலுக்கு ஒரு சமுதாயத்தை மட்டும் சிலுவை சுமக்க வைக்கின்றனர்.


உண்மையாக ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் ஜாதி சான்றிதழை தானே ஒழித்திருக்க வேண்டும் ???. எல்.கே.ஜி குழந்தைக்கு கூட ஜாதி பற்றி அறிமுகமே சாதி சான்றிதழ்களே.  தெரு பெயர்களில் சாதி அடையாளத்தை அழித்துவிட்டால் போதுமா ? டாக்டர் பீமாராவ் அம்பேத்கரே 10 வருடங்கள் மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்று கொண்டு வந்த சட்டத்தை சுதந்திரம் பெற்று 75 ஆண்டகளாகியும் நான் இன்னமும் முன்னேறவே இல்லை, என் பாட்டன் பூட்டனும் பட்ட கஷ்டத்திற்கு எனக்கு சலுகை வேண்டும் என்பது அமெரிக்காவிலோ ஆப்பரிக்காவிலோ சங்கிலியால் கட்டப்பட்டு அடிமைகளாக கூண்டில் வளர்க்கப்பட்டவர்களே கூட கேட்கவில்லை.  ஆனால் இந்தியா மட்டும் ஜாதி பேயை ஒழிக்கக் கூடாது என்று பல வெளி நாட்டு அரசுகளும் தங்கள் கைகூலிகளை இங்கு சூடு குறையாமல் இருக்க பணபலத்தை கொண்டு உசுப்பேற்றி வருகின்றன.

https://threadreaderapp.com/thread/1698499744643838098.html


காலம் காலமாக எட்டப்பன்களும் தோன்றி வருவதால் அவர்களும் திராவிட மாடலாம் பிரித்தாளும் தந்திரத்தை மீண்டும் மீண்டும் அரங்கேற்றுகிறார்கள்.  யார் என்று தெரிகிறதா ? என்று தனது விஸ்வரூபத்தை “விக்கிறோம்” என்று கமல் காசன் வெளிப்படையாக விற்று வருகிறார். டி.எம்.கே வும் தானும் திராவிட மாடல் கிருஷ்ணா தான் வீண் வசனம் பேசி வருகிறார்.

கிறித்துவ மத வியாபாரிகளும் இந்த பிரிவினை மத போதனையை வெளிப்படையாக செய்கிறார்கள். இஸ்லாமிய வியாபாரிகளோ பிராமண அக்ரஹாரங்களை விலைக் கொடுத்து எடுத்துக் கொண்டு, பெண்களை “லவ் ஜிஹாத்” மூலமும் இந்த சமூகத்தை நிர்மூலமாக்க பல முயற்சிகள் செய்து வருகின்றனர்.

எந்த துறையிலும் தனித்தன்மையை வெளிப்படுத்துவது குற்றமா ?

பில்டர் காபி, சாப்பாடு வகையில் பலற்றிலும் தனித்தன்மையின் வெளிப்பாடை போற்றி கொண்டாடி அதன் கலை நயத்தை பாதுகாக்க வேண்டும்.

தொழுகை ஒன்றாக தான் செய்வோம் , பிரியாணியை நாங்கள் ஒன்றாக தான் தின்போம் என்பதை இது கூடாது தவறு, நீங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தக் கூடாது என்று இந்த நாட்டில் யாராவது கூறுகிறார்களா ?

ஆனால் பிராமணர்களின் மொழியியலையும் வாழ்வியலையும் கிண்டலடிப்பதேன் ? ஓழித்து கட்ட முயல்வதேன் ??

செஸ் விளையாட்டில் அகில உலக சாதனைகள் பல படைத்தாலும் விஸ்வநாதன் ஆனந்தை கூட சாதி அடையாளத்துடன் தான் பிரித்து பார்க்கிறார்கள்.  இன்றைய செஸ் ஹீரோ பிரக்கயானந்தா எல்லா போட்டிகளிலும் நெற்றியில் திருநீறு இடுவதால் அவரும் பிராமணரோ என்று ஆராயப்படுகிறார். பாய்களின் ஓட்டு வேண்டும் என்று பாழ் நெத்தி பழனிசாமியாக வலம் வருகிறார். எந்த சாதியை அழித்துவிட்டதாக மார் தட்டுகிறார்களோ, அதே சாதிகளை பார்க்காமல் யாருக்கும் சீட்டு வழங்கப்படுவதில்லை.  

இதில் மேலும் கொடுமை என்னவென்றால் பாரதியாரின் படங்களில் கூட அவர் நெற்றியில் இடும் விபூதி பட்டையை அழித்து விட்டு படங்கள் வெளியிடுகிறார்கள். 


இதே போல் வள்ளலார் சுவாமிகளின் நெற்றியிலும் விபூதி பட்டையை அழித்து , “மரணிமில்லா பெருவாழ்வு” என்ற பேருண்மையை உலகிற்கு அறிவித்து இந்த பரு உடலையே எப்படி ஒளி உடலாக்கலாம் என்ற உயர்ந்த விஞ்ஞானிகளும் வியக்கும் மெய்ஞானம் அருளியவரை, பிராமணர்கள் ஒன்று சேர்ந்து வடலூரில் வள்ளலாரை ஒரு அறையில் பூட்டி தீ மூட்டி விட்டார்கள் என்று அபத்தமாக கூறும் அளவிற்கு திராவிட மாடல் அறிவு ஜீவிகள் புத்தகம் வெளியிடுகிறார்கள்.  இன்று அவர் ‘பெருவெளி” என்று அறிவித்த இடத்தில் பெரியதாக கட்டிடம் கட்ட பள்ளம் வெட்டி விட்டார்கள்.  வள்ளலார் சொன்ன ஜீவ காருண்ய ஒழுக்கத்தை எந்தவிதத்திலும் கடைபிடிக்காமல் அவர் உருவ வழிபாடுகளை, மந்திர தந்திரங்களை கண்டித்தார் என்பதை அந்தணர்களை கண்டித்தார் என்பதாக பரப்பி இன்று வள்ளலாருக்கு மாபெரும் கட்டிடங்களை கட்ட அவர் கொள்கைக்கு நேர் விரோதமாக செயலாற்றுகின்றனர்.

இத்தகைய இனபடுகொலைகள் , இன தூற்றல் ஒருவித மனபிற்ழ்வே. இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் தனித்தன்மையுடனே படைக்கப்பட்டுள்ளன. என்னை போல் நீ இல்லை என்று அழிக்க முற்பட்டு தான் இன்றும் இரு கிறித்துவ நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே போர், யூத நாடான இஸ்ரேலுக்கும் இஸ்லாமிய நாடான பாலஸ்தீனத்திற்கும் போர் நடந்து கொண்டிருக்கின்றன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இத்தனை அவமானங்களுக்கும் அடக்குமுறைக்களுக்கு பிறகும் “துஷ்டனை கண்டால் தூர விலகு” என்ற கொள்கையுடன் உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் மூளை திறமையால் அங்கும் தன் தனித்தன்மையை வெளிப்படுத்துவதை கண்டு பாராட்டத்தான் வேண்டும்.


 ஒரு பிராமணன் துப்பாக்கி எடுக்க மாட்டான் , எடுத்தால் அதில் இரண்டாவது குண்டு அவன் மீதே பாயும் என்பதை அவன் மணியாச்சியிலேயே உணர்ந்துவிட்டான். 


அம்பிகளை அம்பிகளாக வாழவிடுங்கள். அன்னியனாக்கும் முயற்சியை ஆழ்வார்பேட்டையிலேயே சுஜாதா கோடிட்டு காண்பித்துவிட்டார்.

 ஆக்கபூர்வமான வாழ்க்கையே அனைவருக்கும் நன்மை.

அதை விடுத்து தத்துபித்து விளங்கங்களை அளிப்பருக்கு “ சங்கீத கலாநிதி “ என்பதை காட்டிலும் “சங்கீத உதயநிதி”  பட்டம் அளித்தால் டிடிகே குடும்பாத்தாருக்கு அரசாங்கத்தில் “கலைமாமணி” பட்டம் என்கிற “ப்ரஸ்டீஜ்” கிடைக்கும் என்பது நிச்சயம் “கியாரண்டி” !!!

பின் குறிப்பு :  விலை போகும் பிரபலங்களை திட்டம் போட்டு கட்டம் கட்டி மிரட்டி  பேசவும் ,எழுதவும், படங்கள் எடுக்கவும் யாராவது மிரட்டுகிறார்களா ? எதற்கும் ஒரு சிபிஐ விசாரணை வைத்து மேலும் சில பிரபலங்கள் சிக்காமல் காப்பாற்றலாமே !!!!

சகிருட்டிஸ் Sakritease April 2024







1 comment:

  1. Amazing . You have brought the real status of Brahmin community in Tamilnadu. Kudos to you

    ReplyDelete