மீனம்பாக்கத்தில் மீன் பிடி துறைமுகம் பரந்தூரில் விமான நிலையம்



நாணயம் வெளியிடப்பட்டது

நாணயம் வெளிப்பட்டதா ??

நா நயம் மிக்கவருக்கு

நாணயமும் மிக்கவருக்கு 

நாணயம் எதற்கு? 



67 ம் வருடம் அண்ணாவை நம்பினோம்

37 வயது அண்ணாவையும் 

மலை போல் நம்பினோம்




இருவரும் நன்றாக ஆற்றினார்கள்

உரையை 

முக்கிய தருணத்தில்

விலக்கினார்கள்

திரையை



நாயனம் வாசித்தவர் 

தான் மாப்பிள்ளை என்றால்

நான் ஏன் வந்தேன்

உந்தன் பின்னால் 


     ஜூன் மாதத்தில்

மூணும் நாலும்

ஒண்ணு தான்

தமிழன் தலைல

மண்ணு தான் 


கமல் போகும் பாதையில்

கமல் ஆலயம் போகலாமா?                    


     "விக்கிறோம்" என்று வித்தவரின்

வித்தையினை கற்கவா

இலண்டன் பயணம் ??



ராஜ நாதத்துடன் 

அச் சிங்கம் வரும் என்றார்கள்

ராஜ தந்திரம் என்று 

கை கோர்த்தால்

அசிங்கம் தான் வரும் 


அதான அதான நீ

ஏன் அங்க போனே??


பரந்த விரிந்த ஊரினில்

நீர் நிலை அழித்து 

கோவணத்துடன் நிற்கும்

விவசாயியை விரட்டி

ஆடு மேய்க்கும் சிறுவனே

நிர்வாணத்தை உணர்த்த

(வி)மானம் பறக்க

கௌதமரும் புத்தராய்

ஞானம் அருளி

 மாடு மேய்க்க

கோபால புறம்

அனுப்பினாரா ?


மீனம்பாக்கத்தில்

மீன் பிடிக்க வேண்டி

வரும் காலம்

பழிச் சொல்லும்


பார் முழுக்க

பனிப்பாறை ஆறாகி

ஊரெல்லாம் 

உள்வாங்கி சேறாகி

அன்று

இந்த நாணயமும்

செல்லா காசப்பா !!!!


சகிருட்டிஸ் ஆகஸ்ட் 2024





Comments