A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, March 11, 2025

ஆ ஆ !! சிறியரே !!

 ஆ !!! சிறியரே !!!


ஆ !! சிறியரே !!

அறத்து பால் ஊட்ட வேண்டிய ஆசிரியரும்

பொருட்பால் ஈட்ட வேண்டிய அரசியலும்

அறத்துக்கு அப்பால் போனதால்

காமத்துப்பால் பொங்குகிறது

வள்ளுவன் ஊரில்


கல்வி கற்பிக்க வேண்டியவன்

கலவி கற்பிக்க துணிந்ததால்

பள்ளிகளின் அறைகள் 

பள்ளியறை ஆனதோ ??


தெருவில் திரியும் நாய்கள் கூட


பெண் விரும்பாமல்

இணைய முனைவதில்லை

அறிவை திறக்க வேண்டியவன்

ஆடையை திறக்க வருவானோ ??



சாராய ஆலை அதிபரெல்லாம்

கல்வி தந்தை ஆனதினால்

"அப்பப்பா இது தப்பப்பா"

அலறுது பல சின்ன பாப்பா

"அப்பா ! உனக்கு

கேக்கலையா அப்பா !!"


ஆ ! சிறியரே !!

"ரி" என்ற இடை இனத்தை

"றி" என்று வல் இனமாய்

உடல் வலிமை

மட்டுமே ஆண்மையா ? 

அம்மணமாய் அமர்ந்தாலும்

உணர்ச்சிகளை வென்றவனே

மகாவீரன் !!!!


பெண் என்பது வெறும் ஓட்டை அல்ல


நீ அனுப்பும் ஓட்டை பஸ்சில்

வந்து ஓட்டை போட

மாதம் ஆயிரம் 

தந்துவிட்டு

மானபங்கம்

செய்வதற்கு 


பொறுத்தது போதும்

பொங்கி எழு

முறத்தால்

சிங்கம் விரட்டிய நீ

தீரத்தால்

அசிங்கம் துரத்தி அடி


கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி 

கற்பழித்தல் ஆ ! சிறிய பணி


நல்லதோர் ஆசிரியர் நாலாயிரம்

நச்சு பாம்பு சில நூறு

நசுக்கவே வேண்டியது

நம் பொறுப்பு



சகிருட்டிஸ்

sakritease 11 March 2025



6 comments:

  1. நம் அனைவரின் மனக்குமுறலை மிக அருமையான கவிதையாய் வடித்திருக்கும் தம்பிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா. சமுதாய சூழ்நிலை இப்படி என் மூலமாக வெளிப்பட்டது

      Delete
  2. Poem nice but the situation is very bad .

    ReplyDelete
  3. super. Realy a timely and strong comments to make public aware

    ReplyDelete
    Replies
    1. Yes common public needs to be aware about the tough challenges in daily life

      Delete