கோழிக்குட்டி வந்ததுன்னு
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு
கதையில்ல சாமி_இப்போ காணுது பூமி..
இது மட்டும்தானா_இன்னும் இருக்குது சாமி.."
என்னடா கவியரசர் கண்ணதாசன் எப்பேர்பட்ட அறிவாளி அவர் போய் இந்த மாதிரி இயற்கையில நடக்காததெல்லாம் பாட்டா எழுதிட்டாரென்னு ஒரு நிமிஷம் யோசிக்க வைக்கலாம்.
ஆனா இன்னைக்கு அவர் பாட்ட எழுதி 50 வருஷம் கழிச்சு பார்த்தா இயற்கைக்கு முரணா நாம விஞ்ஞான வளர்ச்சின்ற பேர்ல நாம செய்யற கோமாளித் தனத்தை அப்பவே எழுதிட்டாருன்னு தான் தோணுது .
தாவரங்களை மட்டுமே சாப்பிடும் உயிரினமான யானை இப்போது கேரளாவின் காட்டை ஒட்டி கொட்டபடுகிற குப்பைகளில் இருந்து சிக்கன் கழிவுகளை தின்னும் அளவிற்கு நாம வனத்தை அழிச்சுதால நிலைமை ஆகிவிட்டது.
கோழிகள் கூண்டில் வளர்ப்பது அதிகமானதால் கோழிகளுக்கு தன்னுடைய முட்டைகளை அடை காப்பது, குஞ்சு பொறிப்பது என்பதே தெரியாமல் போக செய்து விட்டோம். சிக்கன் பிரியாணியா இருந்தா தான் வாழ்வேன்னு அடம் பிடிக்கிற லெவல்ல மக்கள் கொலை வெறியோட சுத்திக்கிட்டு இருக்காங்க.
தலைநகர் தில்லியில இனி தெரு நாய்களே இருக்கக் கூடாதுன்னு உச்ச நீதிமன்றம் ஆகஸ்ட் 11, 2025 உத்தரவு போட்டு இருக்காங்க. இத இந்தியாவில் மற்ற நகரங்களிலும் நடைமுறை படுத்தவும் சொல்ல போறாங்க. மனிதர்களோட தொன்று தொட்டு பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக நாய்களும் நம்மோடு வாழ்ந்துட்டு தானே இருக்கு.
அப்ப இந்த பூமி மனிதனுக்காக மட்டும் பயன்படுத்த படைக்கப்பட்டிருக்கா ? மற்ற உயிரினங்கள் இங்க வாழ அனுமதி இல்லையா?
நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் பண்ணிவிட்டு அவைகளின் எண்ணிக்கை குறைக்க செய்யும் போதே மனிதர்களுக்கு இயற்கையா குழந்தைகள் பிறப்பது குறைந்து வருகிறது. திரும்பின பக்கமெல்லாம் "கருத்தரிப்பு மையங்கள்" தான். இயற்கையை மனிதன் கையில் எடுக்க ஆரம்பிசப்பறம் இயறகையிலே எங்க கையை வைத்தாலும் அதன் பின் விளைவுகள் வேறேங்கோ வெடிக்கிறது.
சரி அப்படியாவது மனிதர்கள் ஒற்றுமையா வாழறாங்களா பார்த்தா எங்க பார்த்தாலும் போர்களும் சண்டையும் தான்.
இப்படி பூமிய ஒரு குப்பை மேடாக்கி வாழப் போறோம்னு தன் அறிவுக்கண்ணால் பார்த்து தான் கவிஞர் கண்ணதாசன் "இது மட்டும்தானா_இன்னும் இருக்குது சாமி.."
அன்றே சாபமாக இந்த பாடலை எழுதி விட்டு சென்றாரா ?
அதி வேக நகரமயமாக்கல் தான் உண்மையான வளர்ச்சி என்று தவறான சித்தாந்தத்தால் இனி கிராமங்கள், காடுகள் இருக்கவே இருக்காது என்ற சூழலை நோக்கி நாம் தள்ளிக் கொண்டு செல்கிறோம். காட்டுக்குள்ள நெடுஞ்சாலையையும் ரயில் பாதையையும் போட்டுவிட்டு - யானை ஊருக்குள் வந்துவிட்டது தவறான செய்தி போடுகிறோம். யானையின் காட்டை அழித்தால் தெரு நாய்கள் நம்மை வீட்டை விட்டே வராமல் செய்யும்.
"ஜோஹொ" நிறுவன தலைவர் திரு.ஸ்ரீதர் வேம்பு வாழ்ந்துகாட்டி வழிக்காட்டுவது போல் கிராமங்களில் இருந்து கொண்டு வேலை செய்யும் சூழலை, வாழ்வாதராத்தை உருவாக்குவது இன்று அவசர, அவசிய தேவை. நகரங்கள் உலகத்தை நரகங்கள் ஆக்குகிறது.
இயற்கை இதுக்கு மேலயும் பொறுக்கும்னு எதிர்பார்க்காதீங்க. அங்கங்க பூகம்பம், சுனாமி, நிலச் சரிவு நடந்துகிட்டே இருக்கு. இதுவே இயற்கையின் பாதைக்கு திரும்ப வேண்டிய தருணம்.
சகிருட்டிஸ்
sakritease
LVery necessary article. Compassion and co existence are the need of the hour. Animals should also be shared with the food that is available to us.
ReplyDeleteதங்களின் அனைத்து கரு கருத்துக்களில் உஅன்பாடு என்றாலும், தெரு நாய்களின் விஷயத்தில் எனக்கு சற்து முரண் எண்னாம் உண்டு.
ReplyDeleteபோவோர், வருவோரை, துரத்தவும், தாக்கவும் செய்வதாலேயே கோர்ட்டின் உத்தரவு. நாய்கள் மனிதரோடு இணைந்து வாழ்ந்தது, வாழ்வது, பண்டை காலம் தொட்டு நடந்து வந்து கொண்டிருக்கிறது, ஆனால் தெருக்களில் அலையவிடுவது இல்லை, நாய் அபிமானி என்றால், வீட்டிலோ , அல்லது ஒரு பாதுகாப்பு இடத்திலோ அதை வைத்து பார்த்து கொள்ள வேண்டும், அதை விட்டு, போக, வர உணவு மட்டும் போட்டு, அதை உலவ விட்டால் செயவதறியாமல் அது தொல்லையாய் மாறுகிறது. அதைத்தான் கோர்ட் வேண்டாம் என்கிறது. வேண்டும் என்றால் பொறுப்பெடுத்து அதனை பேணி காக்க வேண்டும் இல்லையென்றால் அதனை ப்ளுக்ராஸ் போன்ற நிறுவனத்தில் ஒப்படைக்க வேண்டும், தெருவில் உலாவ விடுதல் அதற்கும் நல்லதல்ல , நமக்கும் நல்லதல்ல.