தமிழக முதல்வர் கடந்த மாதம் 9.ஜன.2026 இல் "உங்க கனவ சொல்லுங்க" என்ற திட்டத்தை அறிவித்துள்ளார். கடந்த 60 வருடங்களாக தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதே பொருள் ஈட்ட மட்டுமே என்பது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரியும். இதில் பலரும் அரசியல் பதவிகளுக்கு வருவதே சட்டத்திற்கு புறம்பான முறைகளில் பணம், பதவி, புகழ், அதிகாரம் அடைவதற்காகவே என்பது மிகத் தெளிவு." காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்று பட்டினத்தார் சொல்லியும் இன்றளவிற்கும் பண போதையில் இருப்பவர்களுக்கு புரியவேயில்லை. சட்டத்திற்கு புறம்பான முறையில் பணம் சம்பாதிப்பவர்கள், அடியாட்கள் பலம் பொது மக்களை அடித்து மிரட்டி, பணத்தாசை காண்பித்து மட்டுமே மீண்டும் மீண்டும் ஆட்சி செய்து வருகிண்றனர். இதனை கட்சி வித்தியாசமின்றி அனைத்து கட்சிகளிலும் பதவிக்கு வருபவர்கள் பல அடியாட்களை வைத்துக் கொண்டு பல வகைகளில் சொத்து சேர்த்து, இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர்.
யாருமே உருவாக்கவே முடியாத பல மலை குன்றுகளை காணவில்லை, பல கோடி மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின்றன. பல ஆறுகள் ஆழிந்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் மக்களின் எதிர்காலம் மிகவும் கேள்விக் குறியாக உள்ளது ? நல்ல காற்று இல்லாமல், நல்ல தண்ணீர் இல்லாமல், நல்ல தரமான உணவில்லாமல் எப்படிப்பட்ட வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம்.
அரசியல்வாதிகளின் கொள்ளையில் மக்களின் வரிப் பணத்தையே இலவசம் என்ற பெயரில் கொடுத்து தமிழ் நாட்டின் கடன் அதிகரித்து வருகிறது. இந்த கடன்களை எப்படி திருப்பி கொடுக்க முடியும் ???
மேலும் அதிக வரிகள் எதிர்கால சந்தததியினர் தான் கொடுக்க வேண்டி வரும்.
மக்கள் சுதாரிக்க வேண்டிய காலத்தின் கட்டாயாம் இது. அதனால் மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு கனவு காண வேண்டும் - அனைத்து ஆண்ட , ஆள்கின்ற கட்சிகளின் அனைத்து பிரதிநிதிகளின் சொத்துகளை அவர்களாகவே வந்து அரசாங்கத்தில் ஓப்படைத்து விட்டு தமிழகத்தின் கடனை முழுவதுமாக அடைப்பதாக ஒரு சுகமான கனவு காண்போம்.
உங்க களவ சொல்லுங்க
என்ற திட்டத்தை பொது மக்கள் அறிவிக்க வேண்டும். அரசியல்வாதிகள் அனைவரும் தங்கள் சொத்துக்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த கனவு மெய்ப்பட வேண்டும்.
சகிருட்டிஸ்
Sakritease
28 Feb 2026
Comments
Post a Comment
Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்