"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி" என்ற பாடலில் உதாரணம் கூறப்பட்டதை தமிழ்நாட்டில் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி நடத்தி காட்டியிருக்கிறார்.
திமுக மற்றும் அதிமுகவின் சின்னங்களை மக்கள் மனதில் பதிய வைத்ததில் திரு எம் ஜி ஆரின் பங்கே மிக முக்கியமானது. அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை மேலும் கட்டிக் காத்ததில் செல்வி ஜெயலலிதாவின் பங்கும் மிக முக்கியமானது. இவர்கள் இருவருக்கும் மக்களிடம் நேரடி செல்வாக்கு இருந்தது. ஆனால் இது போல் நேரடியாக மக்களிடம் செல்வாக்கு இல்லாத திரு எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை இதுக்கு முன்னால் இருந்த பொது செயலாளர்களை போல் தன்னையும் நினைத்து கொண்டு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தன் மனம் போன போக்கில் இஷ்டப்படி கூட்டணி அமைத்து கூட்டணி கட்சிகளையும் கொஞ்சமும் மதிக்காமல் எடப்பாடி இஷ்டப்படி தொகுதிகளை ஒதுக்கி , கூட்டணி கட்சிகளைக்கு போதுமான பிரச்சாரமும் செய்யாமல், தமிழ் நாட்டு மக்களுக்கு திமுக ஆட்சியின் மேல் இருந்த கோபத்தை அறுவடை செய்யாமல் புத்தம் புதிதாக களத்திற்கு வந்துள்ள திரு விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி வழி பாதை போட்டு கொடுத்துள்ளார்.
அண்ணாமலையை காவு கொடுத்தது ஏன் ?
அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து இறக்கி பாஜக வை நொண்டி ஆக்கி அவர்களுக்கு உருப்படாத தொகுதிகளை கொடுத்து ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்று கையறு நிலைக்கு தள்ளினார். அதையும் மீறி பாஜக ஒரே ஒரு தொகுதியில் வென்று உள்ளது. தன் தீவிர முயற்சியால் தனியாகவே பாஜக விற்கு 12.5% ஓட்டு வங்கியை வளர்த்த அண்ணாமலக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்காமல், நிற்க விடாமல் செய்து தமிழ் நாட்டில் பாஜகவை ஒரு செல்லாகாசாக்கி உள்ளார் பழனிசாமி.
2026 தேர்தலில் இளைஞர்கள் இரண்டு கழ்கங்களுக்கும் மாற்றை விரும்புகிறார்கள் என்று சாதாரண பொது மக்களுக்கே புரிந்த விஷயம் மத்திய பாஜக விற்கு ஏன் புரியவில்லை ? வங்காளத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நிலையில் இருந்த மம்தா பானர்ஜியை தோற்கடிக்க முடிந்த பாஜக வால் தமிழ் நாட்டில் ஒரே ஒரு சீட்டு தான் வாங்க முடிந்ததது என்று நம்ப முடிகிறதா ?
உளவுத்துறை யின் சாகசங்களை போற்றும் படமான " துரந்தர்" வெளிவந்து வெற்றி நடை போடும் இந்த வேளையில் உளவுத்துறையின் பிதாமகர் திரு அஜித் தோவல் வங்காள இஸ்லாமியர்கள் ஓட்டும் பாஜகவிற்கு விழ இஸ்லாமிய குருமார்கள், தொழில் அதிபர்கள் மற்றும் முக்கியுமானவர்களை பார்த்து "நாட்டிற்கு நல்லது " என்று வங்காளத்தில் ஓட்டுக்கள் வரச் செய்தவர் தமிழ் நாட்டில் மட்டும் "தன் நிலை" அறியாத பழனிசாமியுடன் கூட்டணி வைக்க அனுமதித்தது ஏன் ??
பா.ஜ.க வில் துரந்தர்கள்
பா ஜ க தனியாக நின்றிருந்தாலோ அல்லது விஜய்யுடன் கூட்டணி வைத்திருந்தாலோ தமிழ் நாட்டில் குறைந்த பட்சம் இரட்டை இலக்க தொகுதிகளை வென்று இருக்கலாம். தமிழக பாஜகவில் தான் அதிகமாக வெளி கட்சிகளின் " துரந்தர்" செயல்பாடுகள் இருப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எடப்பாடி கூட்டணியினருக்கு பிரச்சாரமே செய்யவில்லை :
பழனிச்சாமி அதிமுக தவிர மற்ற கூட்டணி கட்சிகள் யாருக்கும் ஒழுங்காக பிரச்சாரம் செய்யவில்லை. குஷ்பு சுந்தர், அமமுக போன்றவர்கள் இந்த குற்றாசாட்டை முன் வைத்தனர். இதில் திரு மோடியை வேறு தேவையில்லாமல் பிரச்சாரத்திற்கு அழைத்து வந்து அவர் நேரத்தை வீணடித்தார்கள். வங்காளத்தில் வெறும் "பொரி" சாப்பிட்டே மம்தாவை காலி செய்தவருக்கு, விஜய்க்கு இருந்த அபரிமிதமான ஆதரவை ஏன் கண்ணுக்கு தெரியாமல் போனது. உண்மையான பா.ஜ.க விசுவாசிகள், ஆர் எஸ் எஸ் சேவையாளர்களை யாரும் சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை.
மோடியா ? லேடியா ? என்ற முழங்கிய சிங்க பெண்ணான செல்வி ஜெயலலிதாவிற்கே பணியாமல் தனித்துஇ நின்று 2014 இரண்டு எம்பி சீட் வெல்ல முடிந்த பா.ஜ.க என்ன காரணத்திற்காக பழனிச்சாமியின் அனைத்து ஆணைகளையும் ஏற்று செயல்பட்டது என்பது விளங்கவேயில்லை.
திமுக- அதிமுக கூட்டணி
இதுவரை ரகசிய்மாகவே நடந்து வந்த மறைமுக கூட்டணி தேர்தல் முடிவுகள் தெரிந்தபின், விஜய்க்கு ஒண்ணு இரண்டு சீட்டுகளால் ஆட்சி அமைக்க தவிக்கிறார் என்றவுடன் எந்த கூட்டணி தமிழ்நாட்டில் யாரும் விரும்ப மாட்டார்களோ, அந்த திமுக - அதிமுக கூட்டணி அட்சி அமைய எடப்பாடி முயற்சிக்கும் போது ஆதரவளிப்பது பா.ஜ.க தனக்கு தானே மண் அள்ளி போட்டு கொள்ளும் செயலாகும். ஒரே நேரத்தில் வங்காளத்தில் அதி புத்திசாலித்தனமும் அதே நேரத்தில் தமிழ் நாட்டில் அடி முட்டாளதனமும் செய்ய பா.ஜ.க வில் மட்டுமே செய்ய முடியும்.
கடைசியில் வான் கோழி முட்டை மட்டுமே போட்டது. அந்த மயில்கள் போல் இறகை விரித்து ஆட்டம் போடத் தெரியவில்லை.
தங்கத்தட்டில் மக்கள் ஆட்சியையே தரத் தயாராக இருந்தும் தட்டிவிட்ட புத்திசாலிகளை தமிழ்நாடு இந்த தேர்தலில் கண்டுவிட்டது.
என்று இந்த தேர்தலில் திமுகவும் அதிமுகவும் பணத்தை வாரி இரைத்தும் எந்த கூட்டணியும் வைக்காமலேயே ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியும் என்று சமூக ஊடகங்களின் வலிமையை இந்த தேர்தல் நிருபித்துள்ளது தமிழ் நாட்டில் நடந்த ஆபத்து கலந்த நல்ல விஷயம்.
சகிருட்டிஸ் 9 மே 2026
Sakritease 9 May 2026


Comments
Post a Comment
Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்