A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Thursday, September 28, 2023

Caste & Reservation has to be abolished


 ந்தியா விடுதலை அடைந்து இன்னமும் ஜாதி அரசியல் மற்றும் ஜாதி ரீதியான வன்முறைகள் குறைந்தபாடில்லை. 

ந்திய அரசியலமைப்பு சட்டப்படி விடுதலை அடைந்த 10 ஆண்டுகளுக்கு அனைத்து சாதிப் பிரிவுகளும் சமமான சமுதாய அந்தஸ்து பெற இட ஓதுக்கீடு தேவை என தீர்மானிக்கப்பட்டு சட்ட வல்லுனர்களால் 10 ஆண்டுகளுக்கு மட்டும் சாதி வாரி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.  

தற்காக ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அரசியல் அமைப்புகள் உருவாகி இட ஓதுக்கீடு 50% வரை அநேக மாநிலங்களிலும் தமிழ் நாட்டில் மட்டும் 69 % இட ஓதுக்கீடு அமலில் உள்ளது.

ட ஓதுக்கீடு அளிக்கப்பட்ட நோக்கம் சாதியினால் தாழ்த்தப்பட்டவராக கூறப்பட்ட சமூகத்தினரும் முன்னேறி அனைத்து சாதியனரும் சமுதாயத்தில் சம அந்தஸ்து அங்கீகாரம் பெற்று சமுதாயத்தில் அனைவரும் ஓற்றுமையாக வாழ வேண்டும் என்பதே. 

னால் இன்றைய நடைமுறை நிலைமை என்ன ? ஒரு குழந்தை வெறும் ஐந்து வயதிலேயே உன் சாதி என்ன என்ற கேள்வியுடனே பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சாதி இல்லை என்று உதட்டளவில் கூறிக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே தேர்தலில் சீட்டு ஒதுக்கும் போது சாதி செல்வாக்கு அடிப்படையிலே மட்டுமே இடம் ஓதுக்கப்படுகிறது.

75 வருடத்திற்கு முன் என் தாத்தா தாழ்த்தப்பட்டவராக நடத்தப்பட்டார் என்பதற்காக இன்றைக்கு இந்த அரசியல் கட்சிகள் சொல்லுவது உண்மையாக இருந்தால் இந்நேரம் சமூக நீதி நிலை நாட்டப்பட்டு இன்றைய சிறுவர்கள் ஜாதி ரீதியான பாரபட்சத்திற்கு ஆளாக வாய்ப்பில்லை. அந்த நிலை உண்மை என்றால் இன்றைய சிறுவர்களுக்கு இட ஓதுக்கீடு தேவையில்லை.  இல்லை சாதி வேறுபாடு இன்னமும் நடைமுறையில் இருக்கிறதென்றால் சாதி ரீதியான இட ஓதுக்கீடு சாதித்தது என்ன ??? 

ட ஓதுக்கீடு மூன்று தலைமுறைக்கு பெற்ற பின்பும் ஒரு தலைமுறைக்கு கூட எங்கள் அடுத்த தலைமுறைக்கு இனி சாதி சான்றிதழ் தேவையில்லை கூறும் துணிவு இருக்கிறதா ??? கல்வியில், வேலை வாய்ப்பில், பதவி உயர்வில் என அனைத்திலும் இட ஓதுக்கீடு அளித்தும் ஒரு சமுதாயத்துக்கோ அல்லது ஒரு சாதி பிரிவினருக்கோ தன்னம்பிக்கை வரவில்லையென்றால் அந்த இட ஓதுக்கீடு சாதி பிளவை அதிகரிக்கரிக்கிறது என்று தானே பொருள். 

ந்த இட ஒதுக்கீடு கொள்கைக்கு வெளியே சில சாதியரை மட்டும் முற்படுத்தப்பட்டோர் என்று கூறி அவர்கள் 99.99% சதவிகிதம் மதிப்பெண் எடுத்தாலும் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்காத அளவிற்கு இந்த நாட்டில் சமூக நீதி நிலவுகிறது. இதனால் அந்த வகுப்புகளை சேர்ந்த பல மாணவர்களும் தங்கள் திற்மையால் பேரும் புகழும் பெற்று பல நாடுகளிலும் உயர் பதவிகளுக்கு போக முடிந்தாலும் ஆனால் இங்கு விட்டு விட்டு சென்ற பெற்றோர்களின் இறுதி சட்ங்கிற்கு கூட வர முடியாத அவல நிலைக்கு இந்திய இட ஒடுக்கீடு முறை பல கோடி இந்தியர்களை வெளிநாடுகளில் தஞ்சம் அடைய செய்துள்ளது. 

ந்தியர்கள் அதிலும் பொது பிரிவினர் தங்கள் திறமையை அரசாங்க வேலைகளில் காட்ட வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.  இதனால் பல நாட்டுகாரர்கள் மத்தியில் தங்கள் திறமையினால் மட்டுமே போராடி உயர் பதவிகளுக்கு உயர்ந்து தங்கள் தனிப்பட்ட வாழ்க்கை தரத்தையும் உயர்த்தி வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையையும் தங்கள் திறமையினால் நிருபிக்கிறார்கள்.




இளைஞர்கள், சிறுவர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் :

ங்கு அனைத்து கட்சி அரசியல்வாதிகளுக்கும் இந்துக்களுக்கு சாதி வாரி இட ஒதுக்கீடு வேண்டும் என்கிறார்கள். அதுவும் கடந்த 75 ஆண்டுகளாக கொடுத்தும் வருகிறார்கள். இன்னமும் 75 ஆண்டுகள் ஆனாலும் கொடுக்க வேண்டும் என்பார்கள். 

முதல் காட்சி : அரசு மருத்துவமனைகளில் அரசியல்வாதிகள் வைத்தியம் பார்த்துக் கொள்வதில்லை.

மீபத்தில் கூட ஒரு அமைச்சருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்றவர்கள் சில நாட்களிலேயே அந்த அமைச்சரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றினர். 
ஏன் என்று அரசியலை தாண்டி சிந்திப்போம் ???????

னியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை வழங்கப்படும் என்ற நம்பிக்கை.  என்ன காரணம் ??? தனியார் மருத்துவமனையில் வேலைக்கு அமர்த்தப்படும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களை திறமையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்து எடுக்கிறார்கள். ஆனால் அரசு வேலைக்கு வரக் கூடிய திறமைகளை காட்டிலும் சாதி வாரி இடஒதுக்கீடு அடைப்படையிலேயே பணிக்கு தேர்வாகின்றனர். எந்த அரசியல்வாதி சாதி வைத்து அரசியல் செய்கிறாரோ அவரே கூட சாதி அடிப்படையில் வந்தவரிடம் தன் உடலை காட்ட விரும்புவதில்லை.

ரண்டாவது காட்சி : தனியார் பள்ளிக்கூடங்கள் 

பெற்றொர் மிகவும் கஷ்டப்பட்டு தாங்கள் சம்பாதிக்கும் வருமானத்தில் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கவே அதிகம் விருப்பப்படுகிறார்கள். அரசு பள்ளிகளில் மிகப் பெரும்பான்மையாகவே ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் வேறு வழியில்லாமல் சேர்க்கிறார்கள். இதில் மிகப் பெரிய முரண் என்ன என்றால் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களை விட சம்பளம் பல மடங்கு குறைவு ஆனால் தனியார் பள்ளிகளில் பாடங்கள் பல மடங்கு அதிகமாக மாணவர்கள் மண்டைக்குள் செலுத்தப்படுகின்றது. ஏனென்றால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சாதி வாரி இட ஒதுக்கீடு மூலமாக பணி அமர்த்தப்படுகிறார்கள். 
( பின் குறிப்பு : அரசு பள்ளிகளிலும் பல அற்புதமான கடமையாற்றும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் )

தனால் குறைந்த மதிப்பெண் எடுத்தவர் கூட சாதி சான்றிதழால் பள்ளிக்கு ஆசிரியர்களாக தாங்களே கற்றுக் கொள்ளாததை மாணவர்களுக்கு போதிக்க முயன்று தாங்களும் தோற்று மாணவர்களையும் தோல்வியுற செய்து, மாணவர்கள் அரசு பள்ளிகளை தவிர்க்கும் நோக்குடன் தனியார் பள்ளிக்கு நோக்கி படை எடுக்கிறார்கள். அதிக சம்பளம் பெறும் அரசு பள்ளி ஆசிரியர் சொல்லி  தர முடியாததை குறைந்த சம்பளம் வாங்கும் தனியார் பள்ளி ஆசிரியர்களால் எப்படி சொல்லி தர முடிகிறது ????

சமத்துவ சமுதாயம் அமைய என்ன செய்ய வேண்டும் ??

முதலில் பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு சாதி சான்றிதழ் வாங்குவதை நிறுத்த வேண்டும். "எந்த சாதியும் இல்லை" என்ற சான்றிதழ் மட்டுமே பெற வேண்டும்.  அப்பொழுது தான் பிள்ளைகளின் கல்வி தரம் உயரும்.

ந்தியா தவிர உலகெங்கிலும் சாதி ரீதியான இட ஒதுக்கீடு இல்லாமலே பலரும் முன்னேறி சாதித்து வருகின்றனர். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை தோல் நிற வெறி தாண்டவமாடிய பின்பும் திரு நெல்சன் மண்டேலா அந்நாட்டின் தலைவரான போதும் கறுப்பு தோல் நிறத்தவருக்கு இட ஓதுக்கீடு கொடுக்கவில்லை. அனைவருக்குமான சமமான வாய்ப்புகளை உருவாக்கினார்.

ன்று நகரமயமாக்கப்பட்ட பல நகரங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பல சாதிகளை சேர்ந்தவரும் மதத்தை சேர்ந்தவர்களும் எந்த பேதமும் இல்லாமல் வாழ்கிறார்கள்.  ஆனால் அனைவரிடமும் காண்பிக்கப்படும் பேதம் நிதி நிலை பொறுத்தே அமைகின்றது. பணக்காரர் ஏழை என்ற பேதம் எந்த மதத்தினர் ஜாதியினர் இடையே உட்பிரிவை ஏற்படுத்துகிறது. பணக்காரர்களின் பிணங்களை புதைக்கவும் ஏழைகளின் பிணங்களை புதைக்கும் கல்லறையும் தனித்தனியே இயங்குகிறது. அதனால் பொருளாதார ரீதியில் பிந்தங்கியவர்களை தூக்கி விட செல்வம் மிக்கவர்கள் வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும். பளபளக்கும் பங்காளக்களில் வேலைகள் செய்து தர ஆட்கள் அதே நகரத்தில் சேரியில் தான் வசிக்க வேண்டியிருக்கிறது.  எந்த வேலை செய்பவரையும் குறைத்தோ மட்டம் தட்டியோ நடத்தக் கூடாது.

னால் அரசியல்வாதிகளுக்கு மக்களை ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இருந்தே பிரித்தாணடு பழக்கமாகிவிட்டது. அதனால் தான் இன்று வரை சாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கோருகிறார்கள். தெருக்களின் பெயர்களில் ( எ.கா.  "அங்கப்ப நாயக்கன் தெரு - அங்கப்பன் தெருவாக மாற்றப்பட்டது )  சாதி பெயர்களை நீக்கியதால் சாதி நீங்கியதா ??? 
இதிலும் ஆண்கள் சாதியை ஓழிக்க மற்ற சாதி, மத பெண்களை தேடி காதல் வலை வீசி அதிலும் பெண்ணடிமை மன வக்கிரங்களை வெளிப்படுத்தும் அவல நிலைக்கு சமுதாயம் சென்று விட்டது. எல்லாவற்றிற்கும் பெண்களை பலிக்கடாவாக்கும் மனபான்மை அனைத்து சமுதாயத்திலும் பரவி இன்று பெண்களுக்கு இட ஓதிக்கீடு மசோதா தாக்கல் செய்யும் அளவிற்கு வந்து விட்டது.  அதிலும் உள் ஒதுக்கீடாக சாதியை புகுத்துகிறார்கள். 

ரசியல்வாதிகளுக்கு உண்மையாகவே தாங்கள் மக்கள் செல்வாக்கை பெற்றவர்கள் என்ற நம்பிக்கை இருந்தால், மக்கள் எதிர்காலத்திலாவது ஓற்றுமையாக வாழ வேண்டும் என்ற நினைப்பு இருந்தால் சாதியின் பெயராலோ மதங்களின் பெயராலோ சலுகைகள் இல்லை என்ற அறிவிப்பு வெளியிடட்டும். அதன் பிறகு இந்த நாட்டு மக்களிடையே சாதி, மத ரீதியான சண்டைகள் சச்சரவுகள் நிச்சயம் குறைந்து விடும்.  
அதுவே உண்மையான சமூக நீதி. சமத்துவ சமுதாயம். 

துவும் தவிர மலைவாழ் மக்களை , காட்டு வாழ் மக்களை, உழவர்கள் பற்றிய பார்வை மாற வேண்டும். இவர்களின் பாரம்பரிய அறிவை இயற்கையை குறைவாக நுகர்ந்து வாழும் அற்புத கலையை கற்க வேண்டும். அவர்களுக்கு ஏதோ நகரவாசிகளை விட நாகரீகம் குறைவானவர்களாக கருதாமல் அவர்களை போற்றி வாழ்ந்தால், நாம் புவி வெப்பமயமாதல் அதன் தொடர்ச்சியாக பேரிடர்களை தவிர்க்க முடியும். 

இயற்கை பேரழிவில் இட ஒதுக்கீடு யாரும் கோர முடியாது ????


சகிருட்டிஸ் செப் 2023
Sakritease Sep 2023







Saturday, September 16, 2023

உரிமைத் தொகை சாதனையா ? வேதனையா ??


 நேற்று ( 15.9.2023 ) முதல் தமிழ் நாட்டில் பல பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க ஆரம்பித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உதவித் தொகை அல்ல உரிமை தொகை என்றதுமே பெண்களுக்கு போய் சேர வேண்டியது போய் சேராமல் இருப்பது அவர்கள் கைகளுக்கு சென்று சேர அரசின் முயற்சியால் நடப்பது போல் அந்த சொல் பயன்பாடு தெரிவிக்கிறது. 

பெண்கள் அவர்கள் வீட்டில் அவர்கள் செய்யும் வேலைக்கு அரசாங்கம் பணம் தர வேண்டும் என்ற வகையில் சொன்னாலும் தங்கள் வீடு என்று உரிமையுடன் செய்யும் பெண்களை இந்த சிந்தனை சிறுமைபடுத்தாதா ??? என் வீடு, என் குடும்பம், என் மக்கள் என்ற சிந்தனையை இந்த தொகை சிதைய செய்யாதா?? ஏற்கனவே என் நாடு என்ற சிந்தனையை ஓட்டுக்கு பணம் என்ற வகையில் தமிழ் நாட்டில் மக்களுக்கு நமது நாடு என்ற பொறுப்புணர்ச்சி குறைந்து வருகிறது. எனது கிராமம் என்ற எண்ணத்தை நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் மக்களுக்கு தங்களது கிராமங்களில் மீது உள்ள பற்று தளர்ந்து வருகிறது.

மேலும் கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி பெண்களும் தான் வெளியில் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சமாளிப்பதற்காக சம்பாதிக்கிறார்கள். ஆனால் பல ஆண்களும் சம்பாதித்தாலும் பலரும் குடிப் பழக்கத்திற்கு ஆளாகியிருப்பதால் வீட்டில் மனைவி சேமிக்கும் சம்பாதிக்கும் பணத்தையும் எடுத்து குடிக்க செலவழிப்பது தமிழ் நாட்டில் டாஸ்மேக் வருமானம் வருடா வருடம் கூடி வருவதிலிருந்தே தெரிகிறது. 

அதனால் மனைவியிடம் இருந்து கணவன் எடுத்து செல்லும் பணத்தை கருத்தில் கொண்டு அந்த பணத்திற்கு ஈடாக அரசாங்கம் இதனை உரிமைத்தொகை என்கிறதா ? 

இந்த உரிமை தொகையையும் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளிடமிருந்து மகன்கள் தாய்களிடமிருந்து அடித்து பிடுங்கி செல்லமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் ? இதனை தடுக்க அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ???? அல்லது அரசாங்கத்தால் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைய முடியுமா ???

இது வரை 50 ஆண்டுகளாக தமிழ் நாட்டில் அரசாங்கமே சாராய விற்பனை செய்ய ஆரம்பித்து குடிகாரர்களின் எண்ணிக்கை கூடியுள்ளதா ??? குறைந்துள்ளதா ?? தமிழ் நாட்டிற்கு வேலைக்கு அனுப்பக் கூடாது என்று வட இந்திய பெண்கள் கூட தங்கள் கணவன்களை பற்றி கவலை கொள்ளும் நிலையில் தமிழகம் உள்ளது.

தமிழ்நாட்டில் குடிகாரர் மறுவாழ்வு என்பது சொல்லளவில் மட்டுமே உள்ளது. பள்ளிக்கூட சிறுவர்கள் கூட குடிக்கும் சூழல் தான் இன்று தமிழ் நாட்டில் நிலவுகிறது. இதில் பல இடங்களில் பெண்கள் கூட குடித்து விட்டு விழுந்து கிடக்கிறார்கள். 

இந்தியாவில் கூட தமிழ்நாட்டில் தான் விதவைகள் அதிகம் என்று இந்தக் கட்டுரை தெரிவிக்கிறது. https://pmptn.wordpress.com/2013/06/05/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/


பெண்கள் உரிமைத் தொகை, பெண்கள் தங்கள் கணவங்களிடம் தினம் தினம் வாங்கும் அடி, உதை, மன உளச்சல் இருந்து மருந்து வாங்க பயன்படுமா ? தன் கணவனும் தன்னிடம் தினம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும் என்ற சின்ன ஆசையை கூட அரசாங்கமே குக்கிராமத்தில் கூட திறந்து வைத்துள்ள சாராயக் கடைகள், உடைத்து விடுகின்றது. அரசாங்கத்தை கடந்த 56 ஆண்டுகளாக நடத்தும் கழக அரசுகள் தங்கள் கட்சிகாரர்கள் நடத்தும் சாராய ஆலைகள் அல்லது சாராய ஆலை நடத்தும் அதிபர்களின் மூலம் தங்கள் கட்சி வளர்ச்சிக்கும் தங்கள் வளர்ச்சிக்கும் அரசியல் வாதிகள் பயன்படுத்தி கொள்ளுகிறார்கள். 

இன்னும் பல கிராமங்களில் சரியான சாலை வசதிகள் இல்லை, பல கிராமங்களுக்கு பாம்பு கடி மருந்துகள் கூட கிடைப்பதில்லை. ஆனால் சாராயக் கடைகள் மற்றும் அதனை ஓட்டி நடத்தப்படும் பார்கள் , பலக்கார கடைகளுக்கு கட்சிக்காரர்களுக்கே தரப்படுகின்றன. இதனால் இந்த வியாபாரத்தை கூட்டிக் கொண்டே போக விரும்பும் வியாபாரிகளாகவே இந்த அரசியல்வாதிகள் செயல்படுகின்றனர். பெண்ணின் கல்யாணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பல பெற்றோர்கள் மணமகன் போதைக்கு அடிமையாக இருக்கக் கூடாது என்றே தேடுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டின் யதார்த்த நிலைமை குடிக்காத ஆண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதனால் உரிமை தொகை என்று அரசாங்கமே அழைப்பது இந்த நிகழ்கால நடைமுறையை ஏற்றுக் கொண்டாற் போல் உள்ளது. அதிலும் கலால் தீர்வை அமைச்சரே "காலை 7 மணிக்கு குடிப்பவர்களை குடிகாரர் என்று அழைக்கக் கூடாது " என்று சொல்லி அதிர்ச்சி அளிக்கிறார்.


காலை எந்த வேலைக்கும் போகிறவரும் குடித்துவிட்டு போனால் எந்த வேலை உருப்படியாக நடக்கும் ??  கட்டிட வேலைக்கு செல்லும் மேஸ்திரி குடித்துவிட்டு சாரத்தில் வேலை செய்ய வேண்டி வந்தால் எப்படிபட்ட தரமான வேலை நடக்கும் ??? 

உண்மையாகவே பெண்கள் மீது அக்கறை கொண்டு முதலில் டாஸ்மேக்கை மூடிவிட்டால், பெண்களுக்கு மாதா மாதம் வரவேண்டிய உரிமைத் தொகை  அவர்கள் கணவர்கள் இடமிருந்தே கிடைக்கும். கூடவே அவர்களிடையே சண்டை சச்சரவுகள் குறைந்து பரஸ்பர அன்பான வாழ்க்கை நடக்கும்.

காலை அவரவர் குழந்தைகளுக்கு அவரவரே உணவை ஊட்டிவிட்டால் அந்த குழந்தையின் இளமை காலம் மிகவும் அன்பாக இனிமையாக இருக்கும். ஆனால் அரசாங்கம் காலை உணவை பள்ளியில் வந்து சாப்பிட செய்தால் தகப்பனுக்கும் குழந்தைகளுக்கும் என்ன ஓட்டுதல் வரும் ? ஏற்கனவே பல தகப்பன்கள் குடிகாரர்களாகி மனைவி மக்களை கவனிப்பதில்லை. இதில் அரசாங்கமே மனைவிக்கு உரிமை தொகையும் குழந்தைகளுக்கு காலை உணவும் கொடுத்துவிட்டால், கணவருக்கும் குடும்பத்திற்குமான பந்தம் மெல்ல அறுந்து போய்விடாதா ?? ஆண்கள் பொறுப்புடன் இருக்க தேவையில்லை என்ற நடைமுறையை அரசாங்கமே கொண்டு வருவதாகிவிடாதா ???

அரசு மக்களுக்கு சுயமாக சம்பாதித்து வாழக் கூடிய வாழ்க்கையை உருவாக்க வேண்டுமா ? அல்லது யாரும் பொறுப்புடன் இருக்கத் தேவையில்லாத சூழ்நிலையை உருவாக்கி மொத்த அரசாங்கத்தையும் கடனாளி ஆக்கி மக்கள் நிரந்தர கடன் சூழலில் அடைக்க வழியே இல்லாத சூழ்நிலையை உருவாக்கலாமா ???

இன்னும் நாங்கள் ஆட்சி செய்யும் நாட்டில் ஒரு கோடி பெண்கள் நாங்கள் மாதம் கொடுக்கப் போகும் ₹1000/- நம்பி வாழ வேண்டிய சூழ்நிலையில் தான் இருக்கிறார்கள் என்று அரசே அறிவிப்பது சாதனையா ?? வேதனையா ??

இன்னும் எங்கள் நாட்டில் பல இலட்சம் குழந்தைகள் காலை உணவே கிடைக்காத அளவிற்குத்தான் நமது மக்களாட்சி  இருக்கிறதா ? அந்த அளவிற்கு எந்த உபயோகமும் இல்லாத தந்தைகள் உடையது எங்கள் நாடு என்று பறை சாற்றுகிறோமா ??

அரசாங்கம் குடிபோதையினால் கிடைக்கும் வருமானத்தை அந்த போதையிலிருந்து மீட்க மட்டுமே பயன்படுத்தி படிபடியாக டாஸ்மேக்கை அறவே ஒழித்து போதையில்லா தமிழகம் உருவாகி, என்று அனைவரும் விடியற்காலையில் எழுந்து தெளிவாக சூரியனை பார்க்கிறோமோ அன்றே தமிழ் நாட்டிற்கு விடியும்.  

இலவசமாக வழங்கப்படும் எந்த பொருளும் தொகையும் யாருக்கும் மதிப்பளிக்காது. தமிழ் நாட்டில் இலவசத்திற்கு மக்கள் பழகி பழகி உழைப்பின் மீது இருக்கும் மதிப்பை இழந்து வருகின்றனர். மதிப்பில்லாத மக்களை ஆட்சி புரிபவர்கள் மதிப்பிழப்பார். 

தமிழர் மிகச் சிறந்த உழைப்பாளிகள் என்று ஆங்கிலேயர் கூட பல நாடுகளுக்கு தமிழர்களை அழைத்து சென்றனர். ஆனால் இனி வரும் காலங்களில் தமிழ் நாட்டுக்காரர்களை எந்த நாட்டிலும் உள்ளே விடமாட்டார்கள், வேலை கொடுக்க மாட்டார்கள். அதே போல் தமிழ் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளும் மெல்ல வெளியேற ஆரம்பிப்பார்கள். கனிம வள கொள்ளையில் மட்டும் முன் நிற்கும் தமிழகம் மலைகளை இழந்து ஆறுகளை இழந்து நாகரீகத்தை இழந்து புறநானூறு அகநானூறு  சங்கம் வைத்து வளர்த்த தமிழ் இந்த மண், அதற்குள் அள்ளப்பட்டிருக்கும்.


சகிருட்டிஸ் செப் 2023

Sakritease Sep 2023