A Nation progresses only with the Best Critics

Art of Critique with Love, care & Concern

Tuesday, March 11, 2025

ஆ ஆ !! சிறியரே !!

 ஆ !!! சிறியரே !!!


ஆ !! சிறியரே !!

அறத்து பால் ஊட்ட வேண்டிய ஆசிரியரும்

பொருட்பால் ஈட்ட வேண்டிய அரசியலும்

அறத்துக்கு அப்பால் போனதால்

காமத்துப்பால் பொங்குகிறது

வள்ளுவன் ஊரில்


கல்வி கற்பிக்க வேண்டியவன்

கலவி கற்பிக்க துணிந்ததால்

பள்ளிகளின் அறைகள் 

பள்ளியறை ஆனதோ ??


தெருவில் திரியும் நாய்கள் கூட


பெண் விரும்பாமல்

இணைய முனைவதில்லை

அறிவை திறக்க வேண்டியவன்

ஆடையை திறக்க வருவானோ ??



சாராய ஆலை அதிபரெல்லாம்

கல்வி தந்தை ஆனதினால்

"அப்பப்பா இது தப்பப்பா"

அலறுது பல சின்ன பாப்பா

"அப்பா ! உனக்கு

கேக்கலையா அப்பா !!"


ஆ ! சிறியரே !!

"ரி" என்ற இடை இனத்தை

"றி" என்று வல் இனமாய்

உடல் வலிமை

மட்டுமே ஆண்மையா ? 

அம்மணமாய் அமர்ந்தாலும்

உணர்ச்சிகளை வென்றவனே

மகாவீரன் !!!!


பெண் என்பது வெறும் ஓட்டை அல்ல


நீ அனுப்பும் ஓட்டை பஸ்சில்

வந்து ஓட்டை போட

மாதம் ஆயிரம் 

தந்துவிட்டு

மானபங்கம்

செய்வதற்கு 


பொறுத்தது போதும்

பொங்கி எழு

முறத்தால்

சிங்கம் விரட்டிய நீ

தீரத்தால்

அசிங்கம் துரத்தி அடி


கற்பித்தல் மட்டுமே ஆசிரியர் பணி 

கற்பழித்தல் ஆ ! சிறிய பணி


நல்லதோர் ஆசிரியர் நாலாயிரம்

நச்சு பாம்பு சில நூறு

நசுக்கவே வேண்டியது

நம் பொறுப்பு



சகிருட்டிஸ்

sakritease 11 March 2025



Friday, March 7, 2025

கொளத்தூர் கண்ணம்மா Kolathur Kannamma


கொளத்தூர் கண்ணம்மா

அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே
சரணடைந்த நீயே

2018 நாம் கூடி ஊழலை ஒழிப்போம்
என்ற நீதி மய்யம் கண்ட நீயே,
 இன்று நீ குறில் ஆகி 
நிதி மையத்தில் 
உட்காந்து கை கூப்ப வச்சுடுச்சே

மூன்றாம் பிறையில்
"நீல நிற சாயம்பட்ட குள்ள நரி கால் தவறி விழுந்த தடி சின்ன பொம்பள " அன்றே உங்க சொந்த குரலில் பாடினீங்க.
அப்படியே " கலரு மாறிப் போச்சு அது காடு தேடி போச்சு " அப்பவே "பாடி"ய நீங்கள் " யாரென்று தெரிகிறதா " என்று உங்க " விஸ்வரூபம்" காண்பிச்சீங்க. 

ஆனா உங்க அடிப்படை கொள்கை யான " யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்"  என்ற நீங்கள். 
எப்பவும் நீங்க "நம்மவர்" ன்னு நினைச்சவங்கள          " தெனாலி" ஆக்கி போட்டு நீங்கள் என்றென்றும் " வசூல் ராஜா " என்று நிரூபித்து விட்டீர்கள் 

சகிருட்டிஸ் 
sakritease March 2025


 

Thursday, March 6, 2025

அப்பப்பா MK Thiagaraja Bhagavathar

 

1 மார்ச் 2025 " அப்பப்பா " என்று உலகமே வியந்த "ஏழிசை வேந்தர்" " முதல் சூப்பர் ஸ்டார்" பிறந்த நாள்

தான் சம்பாதித்த அனைத்தையும் தானமாக அளித்தவர்

அட்சர சுத்தமாக 5 மொழிகளை பாடும் திறமை அதிலும் "தமிழிசை" வளர்த்த விஸ்வகர்மா வான தட்டான் வீட்டுல் பிறந்து தங்க தட்டில் உணவு உண்டும் எளிமையாக வாழ்ந்த உன்னதர் 🙏🙏🙏


சகிருட்டிஸ்

sakritease March 2025

Tuesday, March 4, 2025

சமஸ்கிருதத்தின் தாய் மொழி தமிழ் Sanskrit's Mother Tongue is Tamizh

 சமஸ்கிருதத்தின் தாய் மொழி தமிழ் 

Sanskrit's Mother Tongue is Tamizh

தலைப்பை பார்த்ததும் குழப்பமா ?

ஓரு மொழிக்கு இன்னொரு மொழி எப்படி தாய் மொழியாகும் ?

ஒரு மொழி முதலில் உருவாகி அதன் பின் மற்றொரு மொழி காலத்தின் பரிணாம வளர்ச்சியால் அந்த மொழியின் திரிபு - வேறொரு மொழியாக உருவகம் பெறுகிறது.

உலகின் முதல் மொழி சைகை மொழியாக இருந்து அதன் பிறகு ஓவிய மொழியாகி பின்பு இலக்கண மொழியாக உருவெடுத்து அதன் பின்னே சில கால நிலை மாற்றத்தின் தேவைக்கு கேற்ப சில பூகோள ரீதியான அமைப்புகளினாலும் பல புது மொழிகள் அவற்றின் இலக்கணங்கள் உருவாகின.

இதில் தமிழ் முதலில் தோன்றியிருக்க வாய்ப்பு அதிகம். சமஸ்கிருதமும் தமிழும் ஒலி அளவில் ஒரே அமைப்பை கொண்டவை. 


தமிழில் "க்" பிறகு "ங்" ஆனால் சமஸ்கிருதத்தில் இந்த இரண்டு எழுத்துகளுக்கும் இடையில் "க்" என்பதன் மூன்று அகல விகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இது போல் தான் "ச்" "ஞ்" இடையிலும், "ட்""ண்", "த்" "ந்", "ப்""ம்" க்கு இடையிலும்.  அதே போல் "அ" முதல் "ஃ" உள்ள உயிர் எழுத்தகளிலும் அதே அமைப்பு அங்கங்கே சில ஒலி வேறுபாடுகளுக்காக மேலும் பல உணர்ச்சிகளை வெளிப்படுத்த சில ஒலி கூட்டல்கள் மற்றும் எழுத்துக்களை அதிகரித்துள்ளார்கள். 

தமிழ் 20,000 ஆண்டுகள் பழைமையானது 


என்ன ஒரேடியா ஒரு கப்ஸாவை அடித்து விடுகிறீர்களா ? என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இப்பொது தானே தமிழ் நாகரீகம் 5000 ஆண்டுகள் இரும்பை பயன்படுத்திய நாகரீகம் என்ற செய்தி வந்ததே என்றால். இன்னமும் நாம் கீழடியில் 2000 வருடத்திற்கு முந்தைய ஆராய்ச்சி என்று சொல்லி வந்து 5000 வருட பழைமை என்று பேச தொடங்கும் வேளையில், தமிழர் நாகரீகத்தை தேட வேண்டிய இடம் குமரிக் கடல் - இன்றைய பெருங்கடலில் இன்றைய இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா என்று முன்று கண்டங்களையும் இணைத்த நிலப்பரப்பு இன்று நீருக்குள். " லெமூரியா" என்றும் "குமரிக் கண்டம்" என்றும் குறிப்பிடபடுகிறது.

அப்பறம் எதற்கு சமஸ்கிருதம் ?? 
இன்று கடலுக்கு அடியில் இருக்கும் லெமூரியாவை பற்றி "லெமூரியன் ஸ்க்ரொல்ஸ்" என்ற புத்தகத்தில் சிவாய சுப்பிரமுனிய சுவாமி என்கிற குவாய் தீவின் சைவ மட ஆதீனம் எழுதியுள்ளார். சைவ சித்தாந்தகாரர்கள் எப்பவும் சிவன் ஆட்சி செய்தார் என்றெல்லாம் எழுதுபவர்கள் தானே என்று அலட்சியமாக நாம் ஒதுக்க நினைத்தால், இந்த சைவ சித்தாந்தவதி ஒரு இந்தியரே அல்லர். அவர் பிறப்பால் அமெரிக்கர், அதுவும் ஹவாய் தீவுகளில் பிறந்து இலங்கை யாழ்பாணம் வந்து அவருடைய குருநாதர் திருமிகு யோக சுவாமி அவர்களிடம் சைவ சித்தாந்த தீட்சை பெற்று இன்று உலகிலேயே மிகப் பெரிய கோவிலை குவாய் தீவில் கட்டியுள்ளார்.

அவர் மொழிகளை பற்றி குறிப்பிடுகையில் பூமியின் அதிவலைகளுக்கு ஏற்றாற் போல் பல்வேறு காலகட்டங்களில் பல் வேறு ஊர்களில் பல மொழிகள் தோன்றியதாக குறிப்பிட்டு, தமிழ் இயங்கி வந்த ஒலி அமைப்பை தாண்டி மேலும் நுணுக்கமான ஒலிகள் தேவைப்பட்ட காலம் வந்த போது சமஸ்கிருதம் உருவானதாக தெரிவிக்கிறார். 

பூமி அதிரும் நுண்ணலைகளுடன் நம்ம எண்ண அலைகளையும் ஒருங்கிணைப்பதே தவம் என்கிறார். இன்றைய காலக்கட்டத்திற்கு பூமியின் ஒலி அதிர்வுகள் ஏற்றாற் போல் வேறு ஒரு புது மொழியும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தபடுவதாக குவாய் சுவாமி தெரிவிக்கிறார். 


வரும் காலத்தில் பூமியின் அதிர்வலைகள் மாறினால் மேலும் பல புது மொழிகள் வந்தே தீரும். இது பரிணாம வளர்ச்சி தத்துவமாகும். இது இயற்கை நியதி. 

குழந்தை பிறந்து 5 வயதிற்குள் அவர்களால் 70 மொழி கூட கற்க முடியும்

ஆராய்ச்சியாளர்கள் சிறு குழந்தைகளால் பல்வேறு மொழிகளை மிக எளிதாக கற்க முடியும் என்கிறார்கள். மனிதர்களின் மொழி மட்டும் அல்லாது பல குழந்தைகளும் பூனைகளை பார்த்து 'மியாவ்" என்பதும் "காகா" என்று காக்கைகளை பார்த்து கத்துவதும் அவர்களின் கற்கும் ஆர்வ வெளிப்பாடே. இன்றும் சிலரால் மரங்களுடன் கூட பேச முடிகிறது.

குறுகிய வட்ட அரசியல்வாதிகளுக்கு மட்டுமே மொழி போர்

இன்றைய குறுகிய கண்ணோட்ட அரசியல்
வாதிகள் மட்டுமே தன் பிள்ளைகளை தவிர மற்ற பிள்ளைகளுக்கு அதிகம் உலக அறிவு வரக் கூடாது என்று குயுக்தியால் இரு மொழி கொள்கை என்று பேசுகிறார்கள். ஆனால் அதிக மொழிகள் தெரிய அதுவும் மிருகங்களின்
மொழிகளையும் தெரிந்து கொள்பவர்களால் மாற்று சிந்தனைகளையும் வன்முறை இன்றி ஏற்றுக் கொள்ள முடியும். உலகம் அப்போது தான் அமைதியுடன் வாழ முடியும். "ஹிந்தி" மட்டுமே போதும் என்று நினைக்கும் வட இந்திய கோமாளிகளுக்கும் இது பொருந்தும். 

பல மொழிகளை தெரிந்த பின் பாரதியார் "தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்றார். ஆனால் இன்றைய தமிழ் நாட்டில் பல தமிழர்களுக்கு தமிழே சரிவர எழுத படிக்க தெரியவில்லை. 8 வது படிக்கும் பல மா
ணவர்களுக்கு இன்னமும் சரியாக எழுத படிக்க தெரிவதில்லை என்பதே யதார்த்த நிலைமை. அப்படிபட்ட பிள்ளைகள் "தமிழ் எங்கள் உயிர் மூச்சு
" என்று எப்படி கூற முடியும். 
 
பல மொழிகள் ஆறிந்தால் தன்னம்பிக்கை கூடும்
 இன்று கூகுள் நிறுவனத்தின் தலைவர் திரு. சுந்தர் பிச்சை, தமிழ் மட்டும் தெரிந்து கொண்டு அமெரிக்காவில் சென்று கொடி நாட்டவில்லை, மக்கள் பேசும் மொழிகளையும் கற்று கணிணி பேசும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்றதால் தான் அவர் உச்சத்தை தொட்டுள்ளார். தாய் மொழி தமிழை தெளிவாக "கசடற" கற்க வேண்டும், அதுவும் தவிர "இசை" உட்பட பல்வேறு மொழிகள் கற்க வேண்டும்.  
வெறும் "தமிள்" "தமிள்" என்று உணர்ச்சி வசப்பட்டால் தமிழ் நாட்டில் கூட "பிச்சை" கிடைக்காது. 

இது வாட்சப், இன்ஸ்டா என்ற சமூக ஊடக காலத்தில் குகை மனிதனின் பொம்மை வரையும் "எமொஜி" க்கள் மொழியும் எல்லோருக்கும் தெரிகிறது. 

எந்த மொழியாலும் எந்த மொழியும் அழியாது அந்த மொழியின் ஆழம் இருக்கும் வரை. 20,000 ஆண்டுகளுக்கு முன்பே "சங்கம்" அமைத்து உலகத்தின் அனைத்து மொழிகளுக்கும் "சங்க" என்ற சொல் கொடுத்த தமிழ்,அனைவரையும் ஒற்றுமையாக வாழ வைக்க சொல்லி கொடுத்த தமிழை கொண்டு "பிரித்தாளும்" சொல் வீச்சு வேண்டாம். 

முதன் முதல் தோன்றிய மொழிக் கூட அது தோன்றிய வடிவத்தில் இல்லை. பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளானது. இந்தியாவில் பேசப்படும் மொழிகள் அனைத்திற்கும் எழுத்து வேறானாலும் அதன் உயிர் எழுத்துகளின் மெய் எழுத்தகளின் ஒலி அமைப்பு ஒன்று போலவே உள்ளது என்பதே நிஜம். இவையும் பல மாறுதல்களுக்கு உள்ளாகும். மாற்றத்தை ஏற்போம்.
அதுவும் வர இருக்கும் பருவ நிலை மாற்றங்களினால் பேசும் வழக்கு மொழிகளும் மாறும். 

சகிருட்டிஸ்
Sakritease 
4.3.2025