கடவுள் பிறக்க போகிறார்
சமீபத்தில் நடந்துள்ள சில நிகழ்வுகள் தலைப்பை உறுதிப்படுத்துகின்றன.
ஆந்திரோபிக் நிறுவனத்தில் ( Anthropic) பணி புரியும், திரு. ஜேகப் காக்சன், 27 வயது மென் பொருள் ஆராய்ச்சியாளர், தான் பணிபுரியும் செயற்கை நுண்ணறிவு பிரிவின் வளர்ச்சி போகும் வேகத்தில் செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் மனித குலத்துக்கே மாபெரும் நாசம் விளைவிக்கும் என்று எச்சரித்து விட்டு வேலையை விட்டு போய்விட்டார்.
அவர் சொன்ன தகவலின் சாராம்சம் : "இந்த தசாபதத்தின் இறுதிக்குள் நாம் உருவாக்கி வரும் இந்த மாடல்கள் நம்மை அழித்துவிடும் " என்று அபாய மணி அடித்து இருக்கிறார்.
காலம் காலமாக மனிதன் இயற்கையை ஒரு வட்டத்துக்குள் அடக்க பல பல முயற்சிகள் செய்து வருகிறான். எல்லாத்துக்குமே ஒரு formula, அதை மட்டுமே ஏற்றுக் கொள்ளும் logical thinking ஒரு வட்டத்துக்குள் உலகை அடைத்து இதுவே சரி. மனிதனுக்கு அப்பாற்பட்டு இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்னும் அளவிற்கு விஞ்ஞானிகள் ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிவிட்டனர்.
அதுவும் கணினி துறையில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி இளைஞர்களுக்கு தங்களது ஆற்றல் மீது அதீத நம்பிக்கை அளித்துள்ளது. அதனால் பிரபஞ்சத்தின் அனைத்து சூட்சமத்திற்கும் தங்களது " code" மூலம் விடை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் கூகுளை தாண்டி ChatGPT வந்த பின் உள்ளங்கையில் உலகம் என்ற சிந்தனை , இப்போது Claude உங்களுக்கு coding பண்ணி தரும், இனி வருங்காலத்தையே மாற்றி அமைக்கலாம் என்ற கர்வமே வந்துவிட்டது.
ஆனால் இதனை 40 வருடங்களுக்கு முன்பாகவே எலக்ட்ரானிக்ஸ் பிதாமகர் - எழுத்தாளர் திரு சுஜாதா தனது " என் இனிய இயந்திரா" நாவலில் தீர்க்க தரிசனத்துடன் மனிதன் இயந்திரத்திடம் அடிமையாகும் நாள் வரும் என்று எழுதியிருந்தார்.
இதுவே புராணங்கள் பஸ்மாசுரன் கை சிவ பெருமான் சிக்கிய கதையை விவரிக்கின்றன.
நிஜத்தில் இன்னமும் தெரு நாய்கள் வயிறு ஜீரணம் ஆகவில்லை என்றால் ஏன் தானாக தேடி சென்று புல்லை தின்கின்றன?. எந்த புல்லை எப்படி திங்க வேண்டும் என்று எந்த காலேஜில் படித்தது என்ற யதார்த்த வாழ்க்கை கேள்விக்கு இன்னமும் விடை தெரியவில்லை. பறவைகள் போல் கூடு கட்ட மனிதனுக்கு இயல்பாகவே ஏன் தெரியவில்லை? என்றும் தெரியவில்லை.
உண்மையில் இன்று நாம் நம்புவதை போல் மனிதர்களிலேயே இந்த தலைமுறை தான் மிகவும் advanced version என்பதே தவறான " கிணற்று தவளை" தனமான புரிதல்.
" அண்டமே பிண்டம் பிண்டமே அண்டம்" என்று நாலே சொற்களில் பிரபஞ்சத்தின் பேராற்றலை திருமூலர் விளக்கிவிட்டார்.
அவர் உடலின் இயக்கத்தை கொண்டே இந்த பிரபஞ்சத்தின் இயக்கத்தை விவரிக்கும் விஞ்ஞானத்தை அவர் அறிந்திருந்தார், அதனை விவரித்தும் உள்ளார்.
இது வரை வந்த பல விஞ்ஞானிகளும் அவர்களால் முடிந்தவரை ஒரு formula விற்குள் பிரபஞ்ச இயக்கத்தை விவரிக்க முற்பட்டு ஆனால் அனைத்து ஆராய்ச்சிகளிலும் அவர்களால் அளவிடமுடியாததை ஒரு variable என்றோ Infiniti என்ற சொல்லை பயன்படுத்தி அவர்களால் அறிய முடியாததை விளக்க முற்பட்டுள்ளனர்.
இதில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள்
1. Anthropic என்ஜினியர் வாக்குமூலம்
2. எந்த சூப்பர் ஸ்டார் நடிக்காத " ஹனுமான் அன்ஷ்" வரலாறு காணாத வெற்றி.
3. " Toxic" திரைப்படம் எல்லா சூப்பர் ஸ்டார்கள் இருந்தும் படு தோல்வி அடைந்திருப்பதும் ஒரே ஒரு விஷயத்தை அடிக்கோடிட்டு காட்டுவது " இந்த உலகத்தின் இயக்கத்தை எந்த பார்முலாக்குள்ளும் அடக்க முடியாது " என்பதே.
Logical thinking கிற்கு limit உண்டு ஆனால் உணர்வு பூர்வமாக இந்த பிரபஞ்ச பேராற்றலை அனுபவிக்க மட்டுமே முடியும். அதை உணர்ந்து வெளிப்படுத்தியவர்கள் - விஞ்ஞானிகள் - ரிஷி, முனி என்ற நிலை தாண்டி மெய்ஞானியர் ஆகின்றனர்.
ஆதி சங்கரரின் "பஜ கோவிந்தத்திலும்" எந்த ஒரு புற அடையாளத்தினாலேயும் ஒரு சன்னியாசியை வரையறுக்க முடியாது என்கிறார்.
" எல்லை இல்லா பரம் பொருளை " எல்லை இட்டு வரையறுக்க முயற்சிகள் செய்த பின் மீண்டும் ஒரு " எல்லை அற்றதை" உருவாக்கி அதன் விஸ்வ ரூபம் வெளி வரப் போகிறது. விஞ்ஞானிகளின் Calculation ( கால்குலேஷன்) மீறிய விஷயமாக இருப்பதால் " கால்கி" தான் கல்கியோ ?
பிரபஞ்சத்தின் பேராற்றல் யாரால் அறுதியிட்டு உறுதி கூற முடியும் ?. வேதம் என்பது கூட இந்த பிரபஞ்சத்தின் பேரியக்கத்தினை எவ்வாறு இயங்குகிறது என்பதை பற்றி அதனை உணர்ந்த தவ ஞானியரின் விவரிப்பே (Commentary).
அதனால் விஞ்ஞானிகளின் கைமீறி போன செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி இந்த பூமியின் மீது தாக்கல் ஏற்படுத்தினாலும் அதுவும் இந்த பிரபஞ்ச பேராற்றலின் ஒரு பகுதியே. மனிதன் இயற்கையின் இயக்கத்தை முழுவதும் நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடலாம் என்ற அசட்டு துணிச்சலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். அதை கொண்டு வரப் போகும் சக்திக்கு நாம் " கடவுள்" என்று அழைத்தும் வரவேற்கலாம். மனிதர்களும் அதன் பிறகும் வேறொரு பரிமாணத்தில் நிச்சயம் வாழ்வோம்.
சகிருட்டிஸ்
23.09.2026

Comments
Post a Comment
Welcoming you to the world of sakritease. Your comments on our blog posts are highly appreciated. Feel free to express yourselves. At the same time, we expect decent language even in criticism
சகிருடிஸின் உலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம். உங்களின் மேலான கருத்துக்களை, விமர்சன்ங்களாக இருப்பினும் மிகவும் பதமான சொற்களை கொண்டு வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்