மீண்டும் ராஜாஜி ஆட்சி Rajaji Rule Reincarnated

 மீண்டும் ராஜாஜி ஆட்சி



எல்லோரும் வெளிப்படையாக பெரியார் ஆட்சி, காமராஜரின் ஆட்சி என்று அடிக்கடி கனவு கண்டு கொண்டு
இருந்தாலும் 1952ல் மூதறிஞர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரின் கனவு, அவரின் எந்த திட்டத்தை , தீர்க்க தரிசனத்தை காமராஜர் உட்பட யாருமே புரிந்து கொள்ளாமல் " குல கல்வி" என்று சொன்னார்களோ இன்று அதே திட்டத்தின் புது வடிவமாய் "ஒரு கல்லில் ஆறு மாங்காய்" திட்டத்தை அதே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உயர் கல்வி துறை அமைச்சர் திரு விஸ்வ நாதன் அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழ் நாடு அரசு நடத்தும் அரசு கல்லூரிகளில் கலை மற்றும் அறிவியல் பாடங்கள் எடுத்து படிக்கும் மாணவர்கள் அவர்கள் பாடத்துடன் ஆறு தனித் திறன் பயிற்சிகளை அவரவர் விருப்ப்படி தேர்ந்து எடுத்து அதன்படி 6 "சிறப்பு திறன்களில்" தேர்ச்சி பெற வேண்டும். அது தவிர அந்த கல்லூரிகள் அனைத்தும் குறைந்தது மூன்று தொழிற்சாலைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு மாணவர்கள் அனைவருக்கும் தொழிற்சாலைகளில் நேரடி களப் பயிற்சிக்கும் (Apprenticeship) ஏற்பாடு செய்து கல்லூரி படிப்பை முடித்து வெளியே வரும் போது Industry Ready என்ற நிலைக்கு படித்தவர் அனைவருக்கும் வேலை கிடைக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் திட்டம் தீட்டியுள்ளனர்,

நல்ல விஷயம். மனதார பாராட்ட வேன்டியது தான். 
ஆனால் இது இன்னமும் சிறப்பாக 74 வருடங்களுக்கு முன்பாக நடந்திருந்தால் தொழில் துறையில் நாம் பல நூறு டிவிஸ், அமல்கமேஷன், ஜி டி நாயுடு குழுமம் போன்று பல தொழிலகங்கள் பல்லாயிர கணக்கில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாகியிருக்கும். சுந்தர் பிச்சை போன்றோர் என்றோ கூகுளை தமிழ் நாட்டில் துவக்கி இருப்பர்.  இதுவும் தவிர எண்ணற்ற பாரம்பரிய கைவினை தொழில் அதிபர்கள் என்றோ மாபெரும் சந்தயை ஒவ்வொரு கிராமத்திலும் உருவாக்கி இருப்பார்கள். இன்று அரசியல்வாதிகள் மட்டுமே தங்கள் பிள்ளைகளை அரசியலுக்கு கொன்டு வர முயற்சிக்கிறார்கள். சினிமா நடிகரின் வாரிசுகள் சினிமாவில் கொடி நாட்ட விரும்புகின்றன. டாக்டர்கள் தங்கள் பிள்ளைகளை டாக்டராக்க முயற்சிக்கிறார்கள். விவசாயி மட்டுமே தன் பிள்ளைகளை விவசாயி ஆக்க முயற்சிப்பதில்லை. இன்று apprentice training காக தொழிலகங்களை நாட வேண்டிய நிலையில், தீர்க்க தரிசி ராஜாஜியின் பாதையில் சென்றிருந்தால் பிள்ளைகளுக்கு தங்கள் பெற்றொரின் மீதுள்ள மதிப்பும், பெற்றவர்களின் கைவண்ணத்தை பிள்ளைகள் நேரடியாக கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்திருக்கும். இந்த வாய்ப்பை இன்று நினைத்தாலும் எந்த ஒரு கல்லுரியாலும் பல்கலை கழங்கங்களாலோ வழங்கவே முடியாது.

வீடு தோறும் ஒரு தொழிற்சாலை , வீடு தோறும் ஒரு பல்கலைக்கழகம் உருவாக இருந்த வாய்ப்பை அன்றைய முதல்வர் அவர்களின் ஜாதியை பார்த்து அவர் நோக்கத்தில் குறைகள் கற்பித்தனர், ஆனால் இன்றைய இளைஞர்கள் பட்டப் படிப்பு படித்திருந்தாலும் பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் கல்வி திட்டம் இல்லாததால் தமிழ்நாட்டில் பல்வேறு அலுவலகங்களில் வேலைகள் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்கள் எடுக்க வேண்டிய சுழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். 

இன்று தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு உணவகங்களிலும் தமிழர்கள் வேலைக்கு இல்லை. பல தொழிற்சாலைகளிலும் இதே நிலைமை. அப்படி என்றால் அனைவருமே படித்து விட்டு white collar job தான்  தேடி கொண்டே இருக்கிறார்கள்.  இதனால் பலரும் படிப்பிற்கு ஏத்த வேலை கிடைக்கவில்லை என்று புலம்பிக் கொண்டு வேலை கிடைக்கும் வரை அப்பாவின் பணத்திலோ, அடுத்தவர் பணத்தில் டாஸ்மேக் நிறுவனத்தின் கல்லாவை நிரப்புகிறார்கள். 

முதலில் தமிழ்நாட்டு கல்வி வடிவமைப்பாளர்கள் " கல்வி என்பது தன்னம்பிக்கை பெறவும், பொது அறிவு " பெறும் வகையில் வடிவமைக்க வேண்டும். எந்த தொழில் செய்பவரையும் இழிவாக பார்க்கும் போக்கு மாற வேண்டும். அதுவே உண்மையான சமூக நீதி, இன்றும் வீட்டிற்கும் உணவு டெலிவரி செய்பவரை துச்சமாக பார்க்கும் போக்கு மாற வேண்டும்.

உயர் கல்வி அமைச்சகத்தின் " ஒரு படிப்பு, ஆறு திறன்கள்" சிறப்பாக வெற்றி அடைய பிரார்த்திப்போம்.

இதே வாரத்தில் முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்கள் "தாய்மாமன் தங்க மோதிர திட்டம்" அறிவித்து அதனை உசிலம்பட்டியில் ஆரம்பிப்பதாக கூறிவிட்டு திடீரென்று மதுரை "ராஜாஜி" மருத்துவமனையில் துவக்கி உள்ளார்.
ஒருவேளை முதல்வர் மனதில் "ராஜாஜி ஆட்சி" நடத்த வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா ? இதை கேட்டால் திரு ராஜாஜியே அவரின் ஆத்ம நண்பரை போல் " வெங்காயம் " என்று சொல்லியிருப்பாரோ ?

Comments